[53:45]
இன்னும், நிச்சயமாக
அவனே ஆண், பெண்
என்று ஜோடியாகப்
படைத்தான் -
[53:46]
(கர்ப்பக்
கோளறையில்) செலுத்தப்
படும் போதுள்ள
இந்திரியத் துளியைக்
கொண்டு.
[53:47]
நிச்சயமாக, மறுமுறை
உயிர் கொடுத்து
எழுப்புவதும், அவன்
மீதே இருக்கிறது.
[53:48]
நிச்சயமாக
அவனே தேவையறச் செய்து
சீமானாக்குகிறான்.
[53:49]
நிச்சயமாக
அவன் தான் (இவர்கள் வணங்கும்)
ஷிஃரா (எனும் கோளத்திற்கும்)
இறைவன்.
[53:50]
நிச்சயமாக
முந்திய ஆ(து கூட்டத்)தை
அழித்தவனும் அவன்தான்.
[53:51]
'ஸமூது' (சமூகத்தாரையும் அழித்தவன்
அவனே); எனவே, (அவர்களில்
எவரையும் மிஞ்சுமாறு)
விடவில்லை.
[53:52]
இவர்களுக்கு
முன்னர் இருந்த நூஹுவுடைய
சமூகத்தாரையும்
(அவன் தான் அழித்தான்,) நிச்சயமாக
அவர்கள் பெரும் அநியாயக்
காரர்களாகவும், அட்டூழியம்
செய்தவர்களாகவும்
இருந்தனர்.
[53:53]
அன்றியும், அவனே
(லூத் சமூகத்தார்
வாழ்ந்திருந்த)
ஊர்களான முஃதஃபிகாவையும்
அழித்தான்.
[53:54]
அவ்வூர்களைச்
சூழ வேண்டிய (தண்டனை)
சூழ்ந்து கொண்டது.
[53:55]
எனவே, (மனிதனே!)
உன்னுடைய இறைவனின்
அருட் கொடைகளில்
எதை நீ சந்தேகிக்கிறாய்?
[53:56]
இவர்
முந்திய எச்சரிக்கையாளர்களி(ன்
வரிசையி)லுள்ள
எச்சரிக்கையாளர்
தாம்.
[53:57]
நெருங்கி
வர வேண்டியது (அடுத்து)
நெருங்கி விட்டது.
[53:58]
(அதற்குரிய
நேரத்தில்) அல்லாஹ்வைத்
தவிர அதை வெளியாக்குபவர்
எவரும் இல்லை.
[53:59]
இச்
செய்தியிலிருந்து
நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?
[53:60]
(இதனைப்
பற்றி) நீங்கள் சிரிக்கின்றீர்களா? நீங்கள்
அழாமலும் இருக்கின்றீர்களா?
[53:61]
அலட்சியமாகவும்
நீங்கள் இருக்கின்றீர்கள்.
[53:62]
ஆகவே
நீங்கள் அல்லாஹ்வுக்கு ஸுஜூது
செய்யுங்கள், அவனையே
வணங்குங்கள்.
Al-Qamar
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[54:1]
(இறுதி)
நேரம் நெருங்கி விட்டது
சந்திரனும் பிளந்து
விட்டது.
[54:2]
எனினும், அவர்கள்
ஓர் அத்தாட்சியைப்
பார்த்தால், (அதைப்)
புறக்கணித்து
விடுகிறார்கள், "இது வழமையாக
நடைபெறும் சூனியம்
தான்" என்றும் கூறுகிறார்கள்.
[54:3]
அன்றியும், அவர்கள் (காண்பிக்கப்
பெறும் அத்தாட்சிகளைப்)
பொய்ப்பிக்க முற்படுகின்றனர், மேலும் தங்கள்
இச்சைகளையே பின்பற்றுகின்றனர், ஆயினும்
ஒவ்வொரு காரியமும்
(அதற்கான நிலையில்)
உறுதிப்பட்டே
விடும்.
[54:4]
அச்சுறுத்தலுள்ள
பல செய்திகள் திடமாக
(முன்னரே) அவர்களிடம்
வந்திருக்கின்றன.
[54:5]
நிறைவான
ஞானம் உடையவை
- ஆனால் (அவர்களுக்கு
அவற்றின்) எச்சரிக்கைகள்
பயனளிக்கவில்லை.
[54:6]
ஆகையால்
(நபியே!) அவர்களை விட்டும்
நீர் திரும்பி
விடும், (அவர்களுக்கு)
வெறுப்பான (கேள்வி
கணக்கு) விஷயத்திற்காக
அழைப்பவர் (அவர்களை)
அழைக்கும் நாளில்;