[54:7]
(தாழ்ந்து
பணிந்து) கீழ்நோக்கிய
பார்வையுடன், அவர்கள்
புதை குழிகளிலிருந்து
பரவிச் செல்லும் வெட்டுக்
கிளிகளைப் போல்
வெளியேறுவார்கள்.
[54:8]
அழைப்பவரிடம்
விரைந்து வருவார்கள், "இது மிகவும்
கஷ்டமான நாள்" என்றும்
அக்காஃபிர்கள் கூறுவார்கள்.
[54:9]
இவர்களுக்கு
முன்னர் நூஹின் சமூகத்தினர்
(மறுமையைப்) பொய்யாக்கினர், ஆகவே
அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து
(அவரைப்) 'பைத்தியக்காரர்' என்று
கூறினர், அவர்
விரட்டவும் பட்டார்.
[54:10]
அப்போது
அவர், "நிச்சயமாக நாம்
தோல்வியடைந்தவனாக
இருக்கிறேன், ஆகவே, நீ (எனக்கு)
உதவி செய்வாயாக!" என்று
அவர் தம் இறைவனிடம்
பிரார்த்தித்தார்.
[54:11]
ஆகவே, நாம்
கொட்டும் மழையைக் கொண்டு
வானங்களின் வாயில்களைத்
திறந்து விட்டோம்.
[54:12]
மேலும், பூமியின்
ஊற்றுகளை பொங்க
வைத்தோம், இவ்வாறாக, குறிப்பிட்ட
ஓர் அளவின் படி
(இரு வகை) நீரும்
கலந்(து பெருக்
கெடுத்)தது.
[54:13]
அப்போது, பலகைகளினாலும் ஆணிகளினாலும்
செய்யப்பட்ட மரக்கலத்தின்
மீது அவரை ஏற்றிக்
கொண்டோம்.
[54:14]
எனவே, எவர்
(அவர்களால்) நிராகரிக்கப்பட்டுக்
கொண்டிருந்தாரோ, அவருக்கு
(நற்) கூலி கொடுப்பதற்காக, (அம்மரக்கலம்)
நம் கண் முன்னிலையில்
மிதந்து சென்று
கொண்டிருந்தது.
[54:15]
நிச்சயமாக
நாம் (வருங்காலத்திற்கு
இ(ம் மரக்கலத்)தை
ஓர் அத்தாட்சியாக
விட்டு வைத்தோம்; (இதன் மூலமாக)
நல்லுணர்வு பெறுவோர்
உண்டா?
[54:16]
ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட)
வேதனையும், எச்சரிக்கையும்
எப்படி இருந்தன? (என்பதை கவனிக்க
வேண்டாமா?)
[54:17]
நிச்சயமாக, இக் குர்ஆனை
நன்கு நினைவு
படுத்திக் கொள்ளும்
பொருட்டே எளிதாக்கி
வைத்திருக்கின்றோம்.
எனவே (இதிலிருந்து)
நல்லுணர்வு பெறுவோர்
உண்டா?
[54:18]
'ஆது' (கூட்டத்தாரும்
தங்கள் நபியை)
பொய்ப்படுத்தினர், அதனால், என் (கட்டளையினால்
ஏற்பட்ட) வேதனையும். எச்சரிக்கையும்
எப்படி இருந்தன
(என்பதை கவனிக்க
வேண்டாமா?)
[54:19]
நிச்சயமாக
நாம் அவர்கள் மீது, நிலையான
துர்பாக்கியமுடைய
ஒரு நாளில், பேரிறைச்சலைக்
கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம்.
[54:20]
நிச்சயமாக:
வேரோடு பிடுங்கப் பட்ட
பேரீத்த மரங்களின்
அடித்துறைப் போல்
(அக்காற்று) மனிதர்களை
பிடுங்கி எறிந்து
விட்டது.
[54:21]
ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட)
வேதனையும் எச்சரிக்கையும்
எப்படி இருந்தன? (என்பதைக்
கவனிக்க வேண்டாமா?)
[54:22]
நிச்சமயாக, இக் குர்ஆனை
நன்கு நினைவு
படுத்திக் கொள்ளும்
பொருட்டே எளிதாக்கி
வைத்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து)
நல்லுணர்வு பெறுவோர்
உண்டா?
[54:23]
ஸமூது(கூட்டமு)ம் எச்சரிக்கைகளைப்
பொய்ப்பித்தது.
[54:24]
நம்மிலிருந்துள்ள
ஒரு தனி மனிதரையா
நாம் பின்பற்றுவோம்? (அப்படிச்
செய்தால்) நாம்
நிச்சயமாக வழி கேட்டிலும் பைத்தியத்திலும்
இருப்போம் என்றும்
(அக்கூட்டத்தினர்)
கூறினர்.
[54:25]
நம்மிடையே
இருந்து இவர் மீதுதானா
(நினைவுறுத்தும்)
நல்லுபதேசம் இறக்கப்படவேண்டும், அல்ல!
அவர் ஆணவம் பிடித்த
பெரும் பொய்யர்
(என்றும் அவர்கள்
கூறினர்).
[54:26]
ஆணவம்
பிடித்த பெரும்
பொய்யர் யார்? என்பதை
நாளைக்கு அவர்கள்
திட்டமாக அறிந்து
கொள்வார்கள்.
[54:27]
அவர்களைச்
சோதிக்கும் பொருட்டு, நிச்சயமாக
நாம் ஒரு பெண்
ஒட்டகத்தை அனுப்பி
வைப்போம், ஆகவே, நீர் அவர்களை
கவனித்துக் கொண்டும், பொறுமையுடனும்
இருப்பீராக!