[3:23]
வேதத்தில்
ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்(களான
யூதர்)களை நீர்
கவனிக்கவில்லையா? அவர்களிடையே
(ஏற்பட்ட விவகாரத்தைப்
பற்றி) அல்லாஹ்வின்
வேதத்தைக் கொண்டு
தீர்ப்பளிக்க
அவர்கள் அழைக்கப்பட்டார்கள்; ஆனால்
அவர்களில் ஒரு
பிரிவார் (இதைப்)
புறக்கணித்து
விலகிக் கொண்டனர்.
[3:24]
இதற்குக்
காரணம்; எண்ணிக் கணக்கிடப்பட்ட
(சில) நாட்களே தவிர
(நரக) நெருப்பு
எப்போதைக்கும்
எங்களைத் தீண்டாது
என்று அவர்கள்
கூறிக் கொண்டிருப்பதுதான.; (இது) தவிர
அவர்கள் தம் மார்க்க(விஷய)த்தில்
பொய்யாகக் கற்பனை
செய்து கூறிவந்ததும்
அவர்களை ஏமாற்றி விட்டது.
[3:25]
சந்தேகமில்லாத
அந்த (இறுதி) நாளில்
அவர்களையெல்லாம்
நாம் ஒன்று சேர்த்து, ஒவ்வோர்
ஆத்மாவுக்கும்
அது சம்பாதித்ததற்கு
உரியதை முழுமையாகக்
கொடுக்கப்படும்போது
(அவர்களுடைய நிலை) எப்படியிருக்கும்? அவர்கள்
(தம் வினைகளுக்குரிய
பலன் பெருவதில்)
அநியாயம் செய்யப்பட
மாட்டார்கள்.
[3:26]
(நபியே!) நீர்
கூறுவீராக
[3:27]
(நாயனே!) நீதான்
இரவைப் பகலில் புகுத்துகின்றாய்;. நீதான்
பகலை இரவிலும்
புகுத்துகின்றாய்;. மரித்ததிலிருந்து உயிருள்ளதை
நீயே வெளியாக்குகின்றாய்;. நீயே உயிருள்ளதிலிருந்து
மரித்ததையும் வெளியாக்குகின்றாய்;. மேலும், நீ நாடியோருக்குக்
கணக்கின்றிக்
கொடுக்கின்றாய்.
[3:28]
முஃமின்கள்
(தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி
காஃபிர்களைத்
தம் உற்ற துணைவர்களாக
எடுத்துக்கொள்ள
வேண்டாம்;. அவர்களிடமிருந்து
தங்களைப் பாதுகாத்துக்
கொள்வதற்காக அன்றி
(உங்களில்) எவரேனும் அப்படிச்
செய்தால், (அவருக்கு)
அல்லாஹ்விடத்தில்
எவ்விஷயத்திலும்
சம்பந்தம் இல்லை. இன்னும், அல்லாஹ்
தன்னைப் பற்றி
உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்)
மீள வேண்டியதிருக்கிறது.
[3:29]
(நபியே!) நீர்
கூறும்; "உங்கள் உள்ளத்திலுள்ளதை
நீங்கள் மறைத்தாலும், அல்லது
அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும்
அதை அல்லாஹ் நன்கறிகின்றான்;. இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில்
உள்ளதையும் அவன்
நன்கறிகின்றான்;. அல்லாஹ்
அனைத்துப் பொருட்கள்
மீதும் ஆற்றலுடையவன்
ஆவான்."