[54:28]
(அவ்வூரிலுள்ள
கிணற்றின்) தண்ணீர்
அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்)
இடையில் பங்கிடப்பட்டுள்ளது, "ஒவ்வொருவரும்
(தண்ணீர்) முறைப்படி
குடிப்பதற்கு
வரலாம்" என்று அவர்களுக்கு
அறிவித்து விடும்.
[54:29]
ஆனால்
(அம்மக்களோ ஒட்டகையை அறுத்துவிடத்)
தம் தோழனை அழைத்தனர், அவன்
(துணிந்து கை) நீட்டி
(அதன் கால் நரம்புகளைத்)
தரித்து விட்டான்.
[54:30]
என்
(கட்டளையினால்
பின்னர் அம் மக்களுக்கு)
வேதனையும், எச்சரிக்கையும்
எப்படி இருந்தன? (என்பதை கவனிக்க வேண்டாமா?)
[54:31]
நிச்சயமாக
நாம் அவர்கள் மீது ஒரு பெரும்
சப்தத்தை அனுப்பினோம்
- அதனால் அவர்கள்
காய்ந்து மிதிபட்ட
வேலி(யின் கூளம்)
போல் ஆகிவிட்டனர்.
[54:32]
நிச்சயமாக
இக் குர்ஆனை நன்கு நினைவு
படுத்திக் கொள்ளும்
பொருட்டே எளிதாக்கி
வைத்திருக்கின்றோம், எனவே இதிலிருந்து
நல்லுணர்வு பெறுவோர்
உண்டா?
[54:33]
லூத்துடைய
சமூகத்தாரும் (நம்முடைய)
எச்சரிக்கைகளைப்
பொய்ப்பித்தனர்.
[54:34]
லூத்துடைய
குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள்
மீது, நாம் நிச்சயமாக
கல்மாரியை அனுப்பினோம், விடியற்காலையில் நாம்
அவர் குடும்பத்தார்களை
பாதுகாத்துக்
கொண்டோம்.
[54:35]
நம்மிடமிருந்துள்ள
அருள் கொடையால்
(இப்படிக் காப்பாற்றினோம்)
இவ்வாறே நாம் நன்றி
செலுத்துபவர்களுக்கு கூலி
அளிக்கிறோம்.
[54:36]
திட்டமாக
நம்முடைய கடுமையான பிடியைப்பற்றி
அவர் (தம் சமூகத்தாருக்கு)
அச்சுறுத்தி எச்சரித்திருந்தார். எனினும்
அச்சுறுத்தும்
அவ்வெச்சரிக்கைகளைப்
பற்றி அவர்கள்
சந்தேகி(த்துத் தர்க்கி)க்காலாயினர்.
[54:37]
அன்றியும்
அவருடைய விருந்தினரை (துர்ச்
செயலுக்காக)க்
கொண்டு போகப் பார்த்தார்கள், ஆனால்
நாம் அவர்களுடைய கண்களைப்
போக்கினோம். "என்(னால் உண்டாகும்)
வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவைத்துப்
பாருங்கள்" (என்றும்
கூறினோம்).
[54:38]
எனவே, அதிகாலையில்
அவர்களை நிலையான
வேதனை திட்டமாக
வந்தடைந்தது.
[54:39]
ஆகவே, என்(னால்
உண்டாகும்) வேதனையையும்
எச்சரிக்கையையும்
சுவைத்துப் பாருங்கள்
(என்று கூறினோம்).
[54:40]
நிச்சயமாக
இக் குர்ஆனை நன்கு நினைவு
படுத்திக் கொள்ளும்
பொருட்டே எளிதாக்கி
வைத்திருக்கின்றோம்.
எனவே (இதிலிருந்து)
நல்லுணர்வு பெறுவோர்
உண்டா?
[54:41]
ஃபிர்அவ்னின் கூட்டத்தாருக்கும்
அச்சமூட்டும்
எச்சரிக்கைகள்
வந்தன.
[54:42]
ஆனால்
அவர்கள் நம்முடைய அத்தாட்சிகள்
அனைத்தையும் பொய்யாக்கினர், அப்போது, சக்தி
வாய்ந்த (யாவற்றையும்) மிகைக்கின்றவனின்
பிடியாக அவர்களை
நாம் பிடித்துக்
கொண்டோம்.
[54:43]
(சென்று
போன) அவர்களை விட உங்களிலுள்ள
காஃபிர்கள் மேலானவர்களா? அல்லது, உங்களுக்கு
(வேதனையிலிருந்து) விலக்கு
இருப்பதாக வேத
ஆதாரம் உண்டா?
[54:44]
அல்லது
(நபியே!) "நாங்கள் யாவரும் வெற்றி
பெறுங் கூட்டத்தினர்"
என்று
அவர்கள் கூறுகின்றார்களா?
[54:45]
அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர்
சிதறடிக்கப்பட்டுப்
புறங்காட்டி ஓடுவர்.
[54:46]
அதுவுமின்றி, மறுமைதான் இவர்களுக்கு
வாக்களிக்கப்பட்ட
(சோதனைக்) காலமாகும், மறுமை
அவர்களுக்கு மிகக் கடுமையனதும்
மிக்க கசப்பானதுமாகும்.
[54:47]
நிச்சயமாக, அக்குற்றவாளிகள் வழி கேட்டிலும், மதியிழந்தும்
இருக்கின்றனர்.
[54:48]
அவர்களுடைய
முகங்களின் மீது அவர்கள்
நரகத்திற்கு இழுத்துச்
செல்லப்படும்
நாளில், "நரக நெருப்புத் தீண்டுவதைச்
சுவைத்துப் பாருங்கள்" (என்று
அவர்களுக்கு கூறப்படும்).
[54:49]
நாம்
ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக
(குறிப்பான) அளவின்படியே
படைத்திருக்கின்றோம்.