[55:68]
அவ்விரண்டில், (பற்பல)
கனி வகைகளும், பேரீச்சையும், மாதுளையும்
உண்டு.
[55:69]
ஆகவே, நீங்கள்
இரு சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:70]
அவற்றில், அழகு
மிக்க நற் குணமுள்ள
கன்னியர் இருக்கின்றனர்.
[55:71]
ஆகவே, நீங்கள்
இரு சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:72]
ஹூர்
(என்னும் அக்கன்னியர் அழகிய)
கூடாரங்களில்
மறைக்கப்பட்டிருப்பர்.
[55:73]
ஆகவே, நீங்கள்
இரு சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:74]
அவர்களை
இவர்களுக்கு முன்னர் எந்த
மனிதனும், எந்த
ஜின்னும் தீண்டியதில்லை.
[55:75]
ஆகவே, நீங்கள்
இரு சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:76]
(அவர்கள்)
பசுமையான இரத்தினக்கம்பளங்களின்
மீதும், அழகு மிக்க
விரிப்புக்கள்
மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
[55:77]
ஆகவே, நீங்கள்
இரு சாராரும் உங்கள்
(இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்?
[55:78]
மிக்க
சிறப்பும், கண்ணியமுமுள்ள
உம்முடைய இறைவனின்
திருப்பெயர் மிகவும்
பாக்கிய முடையது.
Al-Wâqi‘ah
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[56:1]
மாபெரும்
நிகழ்ச்சி(யான இறுதிநாள்)
ஏற்பட்டால்
[56:2]
அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது
எதுவுமில்லை.
[56:3]
அது
(தீயோரைத்) தாழ்த்தி விடும், (நல்லோரை)
உயர்த்தி விடும்.
[56:4]
பூமி
நடுக்கத்தால் நடுக்கமடையச்
செய்யும் போது.
[56:5]
இன்னும்
மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும்
போது,
[56:6]
பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி
ஆகிவிடும்.
[56:7]
(அப்போது)
நீங்களும் மூன்று பிரிவினர்களாகி
விடுவீர்கள்.
[56:8]
(முதலாமவர்)
வலது பாரிசத்திலுள்ளோர்
- வலது பாரிசத்துக்காரர்
யார்? (என்பதை அறிவீர்களா?)
[56:9]
(இரண்டாமவர்)
இடது பாரிசத்திலுள்ளோர்
- இடது பாரிசத்திலுள்ளோர்
யார்? (என அறிவீர்களா?)
[56:10]
(மூன்றாமவர்
நம்பிக்கையில்) முந்தியவர்கள்
(மறுமையிலும்)
முந்தியவர்களே
யாவார்கள்.
[56:11]
இவர்கள்
(இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள்.
[56:12]
இவர்கள்
பாக்கியங்களுள்ள (சுவனச்)
சோலைகளில் இருப்பர்.
[56:13]
முதலாமவரில்
ஒரு பெருங் கூட்டத்தினரும்,
[56:14]
பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் -
[56:15]
(பொன்னிழைகளால்)
ஆக்கப் பெற்ற கட்டில்களின்
மீது -
[56:16]
ஒருவரையொருவர் முன்னோக்கியவாகளாக, அவற்றின்
மீது சாய்ந்திருப்பார்கள்.