[56:17]
நிலையான
இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள்
பணிக்காகச்) சுற்றிக்
கொண்டே இருப்பார்கள்.
[56:18]
தெளிந்த
பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும்
கொண்டு (அவர்களிடம்
சுற்றி வருவார்கள்).
[56:19]
(அப்பானங்களைப்
பருகும்) அவர்கள்
அவற்றினால் தலை
நோய்க்காளாக மாட்டார்கள், மதிமயங்கவுமாட்டார்கள்.
[56:20]
இன்னும்
அவர்கள் தெரிந்தெடுக்கும்
கனி வகைகளையும்
-
[56:21]
விரும்பும்
பட்சிகளின் மாமிசத்தையும்
(கொண்டு அவ்விளைஞர்கள்
வருவார்கள்).
[56:22]
(அங்கு
இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும்
நெடிய கண்களுடைய)
கன்னியர் இருப்பர்.
[56:23]
மறைக்கப்பட்ட
முத்துக்களைப் போல்
அவர்கள் (இருப்பார்கள்).
[56:24]
(இவையாவும்)
சுவர்க்க வாசிகள் (இம்மையில்
செய்து கொண்டிருந்த)
செயல்களுக்கு
கூலியாகும்.
[56:25]
அங்கு
இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும்
(கொண்ட பேச்சுகளைச்)
செவியுற மாட்டார்கள்.
[56:26]
'ஸலாம், ஸலாம்' என்னும் சொல்லையே
(செவியுறுவார்கள்).
[56:27]
இன்னும்
வலப்புறத்தார்கள்
- வலப்புறத்தார்கள்
யார்? (என்பதை அறிவீர்களா?)
[56:28]
(அவர்கள்)
முள்ளில்லாத இலந்தை மரத்தின்
கீழும்:
[56:29]
(நுனி முதல்
அடிவரை) குலை குலையாகப்
பழங்களுடை வாழை
மரத்தின் கீழும்:
[56:30]
இன்னும், நீண்ட
நிழலிலும்,
[56:31]
(சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும்
நீரின் அருகிலும்,
[56:32]
ஏராளமான
கனிவகைகளின் மத்தியிலும்
-
[56:33]
அவை
அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை -
[56:34]
மேலும், உன்னதமான விரிப்புகளில்
(அமர்ந்திருப்பர்).
[56:35]
நிச்சயமாக
(ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்)
புதிய படைப்பாக, நாம்
உண்டாக்கி,
[56:36]
அப்பெண்களைக்
கன்னிகளாகவும்,
[56:37]
(தம் துணைவர்
மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும்,
[56:38]
வலப்புறத்தோருக்காக
(ஆக்கி வைத்துள்ளோம்).
[56:39]
முன்னுள்ளோரில்
ஒரு கூட்டமும்,
[56:40]
பின்னுள்ளோரில்
ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக
இருப்பார்கள்).
[56:41]
இடது
பாரிசத்திலுள்ளவர்களோ இடது
பாரிசத்திலுள்ளவர்கள்
யார்? (என்று அறிவீர்களா?)
[56:42]
(அவர்கள்)
கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும்
நீரிலும் -
[56:43]
அடர்ந்து
இருண்ட புகையின் நிழலிலும்
இருப்பார்கள்.
[56:44]
(அங்கு)
குளிர்ச்சியுமில்லை, நலமுமில்லை.
[56:45]
நிச்சயமாக
அவர்கள் இதற்கு முன்னர்
(உலகத்தில்) சுகபோகிகளாக
இருந்தனர்.
[56:46]
ஆனால், அவர்கள்
பெரும் பாவத்தின்
மீது நிலைத்தும்
இருந்தனர்.
[56:47]
மேலும், அவர்கள், "நாம் மரித்து
மண்ணாகவும், எலும்புகளாகவும்
ஆகி விட்டாலும், நாம்
மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?" என்று
கேட்டுக் கொண்டு
இருந்தனர்.
[56:48]
அல்லது, முன்னோர்களான
நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்?
என்றும்
கூறினர்.)
[56:49]
(நபியே!) நீர்
கூறும்: "(நிச்சயமாக
உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும்.
[56:50]
குறிப்பிட்ட
நாளின் ஒரு நேரத்தில்
(நீங்கள் யாவரும்)
ஒன்று கூட்டப்படுவீர்கள்.