[56:51]
அதற்குப்
பின்னர்: பொய்யர்களாகிய
வழி கேடர்களே!
நிச்சயமாக நீங்கள்,
[56:52]
ஜக்கூம்
(என்னும் கள்ளி) மரத்திலிருந்தே
நீங்கள் புசிப்பவர்கள்.
[56:53]
ஆகவே, "அதைக்
கொண்டே வயிறுகளை
நிரப்புவீர்கள்.
[56:54]
அப்புறம்
அதன்மேல் கொதிக்கும் நீரையே
குடிப்பீர்கள்.
[56:55]
பின்னும்
ஹீம் - தாகமுள்ள ஒட்டகை
குடிப்பதைப் போல்
குடிப்பீர்கள்.
[56:56]
இதுதான்
நியாயத் தீர்ப்பு நாளில்
அவர்களுக்கு விருந்தாகும்.
[56:57]
நாமே
உங்களைப் படைத்தோம். எனவே, (நாம்
கூறுவதை) நீங்கள்
உண்மையென்று நம்ப
வேண்டாமா?
[56:58]
(கர்ப்பப்
பையில்) நீங்கள் செலுத்தும்
இந்திரியத்தைக்
கவனித்தீர்களா?
[56:59]
அதை
நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது
நாம் படைக்கின்றோமா?
[56:60]
உங்களுக்கிடையில்
மரணத்தையும் நாமே
ஏற்படுத்தியுள்ளோம், எனவே
நம்மை எவரும் மிகைக்க
முடியாது.
[56:61]
(அன்றியும்
உங்களைப் போக்கி விட்டு)
உங்கள் போன்றோரை
பதிலாகக் கொண்டு
வந்து நீங்கள்
அறியாத உருவத்தில் உங்களை
உண்டாக்கவும்
(நாம் இயலாதவர்கள்
அல்ல).
[56:62]
முதல்
முறையாக (நாம்
உங்களைப்) படைத்தது
பற்றி நிச்சயமாக
நீங்கள் அறிவீர்கள்
- எனவே (அதிலிருந்து
நினைவு கூர்ந்து)
நீங்கள் உணர்வு
பெற வேண்டாமா?
[56:63]
(இப்பூமியில்)
விதைப்பதை நீங்கள்
கவனித்தீர்களா?
[56:64]
அதனை
நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது
நாம் முளைக்கச்
செய்கின்றோமா?
[56:65]
நாம்
நாடினால் திட்டமாக
அதனைக் கூளமாய்
ஆக்கிவிடுவோம்
- அப்பால் நீங்கள்
ஆச்சரியப்பட்டுக்
கொண்டு இருப்பீர்கள்.
[56:66]
நிச்சயமாக
நாம் கடன் பட்டவர்களாகி
விட்டோம்.
[56:67]
மேலும், (பயிர்களிலிருந்து
எதுவும் பெற முடியாதவர்களாகத்)
தடுக்கப்பட்டு விட்டோம்" (என்றும்
கூறிக் கொண்டிருப்பீர்கள்).
[56:68]
அன்றியும், நீங்கள்
குடிக்கும் நீரைக்
கவனித்தீர்களா?
[56:69]
மேகத்திலிருந்து
அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது
நாம் இறக்குகிறோமா?
[56:70]
நாம்
நாடினால், அதைக் கைப்புள்ள
தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்)
நீங்கள் நன்றி
செலுத்த வேண்டாமா?
[56:71]
நீங்கள்
மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?
[56:72]
அதன்
மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது
நாம் உண்டு பண்ணுகிறோமா?
[56:73]
நாம்
அதனை நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்கு
பயனளிக்கப்பதற்காகவும்
உண்டாக்கினோம்.
[56:74]
ஆகவே, மகத்தான
உம்முடைய ரப்பின்
திருநாமத்தைக்
கொண்டு தஸ்பீஹு
செய்வீராக.
[56:75]
நட்சத்திர
மண்டலங்களின்
மீது நான்
சத்தியம் செய்கிறேன்.
[56:76]
நீங்கள்
அறீவீர்களாயின் நிச்சயமாக
இது மகத்தான் பிரமாணமாகும்.