[56:77]
நீச்சயமாக, இது மிகவும் கண்ணியமும்
சங்கையும் மிக்க
குர்ஆன் ஆகும்.
[56:78]
பாதுகாக்கப்பட்ட
ஏட்டில் இருக்கிறது.
[56:79]
தூய்மையானவர்களைத்
தவிர (வேறெவரும்)
இதனைத் தொட மாட்டார்கள்.
[56:80]
அகிலத்தாரின்
இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.
[56:81]
அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான)
இச்செய்தி பற்றி
நீங்கள் அலட்சியமாக
இருக்கிறீர்களா?
[56:82]
நீங்கள்
பொய்ப்பிப்பதை
(இறைவன் தந்த)
உங்கள் பாக்கியங்களுக்கு
(நன்றியாக) ஆக்குகின்றீர்களா?
[56:83]
மரணத்
தறுவாயில் ஒருவனின் (உயிர்)
தொண்டைக் குழியை
அடையும் போது
-
[56:84]
அந்நேரம்
நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
[56:85]
ஆயினும், நாமோ
அவனுக்கு உங்களை விட சமீபமாக
இருக்கிறோம். எனினும்
நீங்கள் பார்க்கிறீர்களில்லை.
[56:86]
எனவே, (மறுமையில்
உங்கள் செயல்களுக்கு)
கூலி கொடுக்கப்பட
மாட்டீர்கள் என்று
இருந்தால் -
[56:87]
நீங்கள்
உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை)
மீளவைத்திருக்கலாமே!
[56:88]
(இறந்தவர்
இறைவனுக்கு) நெருக்கமானவர்களில்
நின்றும் இருப்பாராயின்.
[56:89]
அவருக்குச்
சுகமும், நல்லுணவும்
இன்னும் பாக்கியமுள்ள
சுவர்க்கமும்
உண்டு.
[56:90]
அன்றியும், அவர்
வலப்புறத்துத் தோழராக
இருந்தால்,
[56:91]
வலப்புறத்தோரே!
உங்களுக்கு ஸலாம்" உண்டாவதாக" (என்று
கூறப்படும்).
[56:92]
ஆனால்
அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில்
(ஒருவனாக) இருந்தால்
[56:93]
கொதிக்கும்
நீரே, அவனுக்கு விருந்தாகும்.
[56:94]
நரக
நெருப்பில் தள்ளப்படுவது (விருந்தாகும்).
[56:95]
நிச்சயமாக
இதுதான் உறுதியான உண்மையாகும்.
[56:96]
எனவே
(நபியே!) மகத்தான உம்முடைய
இறைவனின் திருநாமத்தைக்
கொண்டு தஸ்பீஹு
செய்வீராக.
Al-Hadîd
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[57:1]
வானங்களிலும், பூமியிலும் உள்ளயாவும்
அல்லாஹ்வுக்கே
தஸ்பீஹு செய்து
(துதி செய்து) கொண்டிருக்கின்றன
- அவன் (யாவரையும்)
மிகைத்தோன், ஞானம்
மிக்கவன்.
[57:2]
வானங்களுடையவும், பூமியுடையவும்
ஆட்சி அவனுக்கே
உடையது, அவனே உயிர்ப்பிக்கிறான், மரிக்கும் படியும்
செய்கிறான் - மேலும்
அவன் அனைத்துப்
பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
[57:3]
(யாவற்றுக்கும்)
முந்தியவனும் அவனே, பிந்தியவனும்
அவனே, பகிரங்கமானவனும்
அவனே, அந்தரங்கமானவனும்
அவனே, மேலும், அவன் அனைத்துப்
பொருள்களையும்
நன்கறிந்தவன்.