[3:30]
ஒவ்வோர்
ஆத்மாவும், தான்
செய்த நன்மைகளும்; இன்னும், தான்
செய்த தீமைகளும்
அந்த(த் தீர்ப்பு)
நாளில் தன்முன்கொண்டு
வரப்பட்டதும், அது தான்
செய்த தீமைக்கும்
தனக்கும் இடையே
வெகு தூரம்
இருக்க வேண்டுமே
என்று விரும்பும்;. அல்லாஹ்
தன்னைப்பற்றி
நினைவு கூறுமாறு உங்களை
எச்சரிக்கின்றான்;. இன்னும்
அல்லாஹ் தன் அடியார்கள்
மீது கருணை உடையோனாக இருக்கின்றான்.
[3:31]
(நபியே!) நீர்
கூறும்; "நீங்கள் அல்லாஹ்வை
நேசிப்பீர்களானால், என்னைப்
பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை
நேசிப்பான்; உங்கள்
பாவங்களை உங்களுக்காக
மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க
கருணை உடையவனாகவும்
இருக்கின்றான்.
[3:32]
(நபியே!
இன்னும்) நீர்
கூறும்; "அல்லாஹ்வுக்கும்
(அவன்) தூதருக்கும்
வழிப்படுங்கள்." ஆனால்
அவர்கள் புறக்கணித்துத்
திரும்பி விடுவார்களானால்
- நிச்சயமாக அல்லாஹ்
காஃபிர்களை நேசிப்பதில்லை.
[3:33]
ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின்
சந்ததியரையும், இம்ரானின்
சந்ததியரையும்
நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை
விட மேலாக தேர்ந்தெடுத்தான்.
[3:34]
(அவர்களில்)
ஒருவர் மற்றவரின் சந்ததியாவார்
- மேலும், அல்லாஹ்
(யாவற்றையும்)
செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும்
இருக்கின்றான்.
[3:35]
இம்ரானின்
மனைவி; "என் இரைவனே!
என் கர்ப்பத்திலுள்ளதை
உனக்கு முற்றிலும்
அர்ப்பணிக்க நான்
நிச்சயமாக நேர்ந்து
கொள்கிறேன்;. எனவே
(இதை) என்னிடமிருந்து
நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக
நீ யாவற்றையும்
செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்" என்று
கூறியதையும்.
[3:36]
(பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக)
அவள் ஒரு பெண்
குழந்தையைப் பெற்றதும்; "என் இறைவனே! நான்
ஒரு பெண்ணையே
பெற்றிருக்கின்றேன்" எனக் கூறியதையும்
நினைவு கூறுங்கள்;. அவள் பெற்றெடுத்ததை
அல்லாஹ் நன்கறிவான்;. ஆண், பெண்ணைப்
போலல்ல. (மேலும்
அந்தத்தாய் சொன்னாள்;) "அவளுக்கு
மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்;. இன்னும்
அவளையும், அவள் சந்ததியையும்
விரட்டப்பட்ட
ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து
காப்பாற்றத் திடமாக
உன்னிடம் காவல்
தேடுகின்றேன்.
[3:37]
அவளுடைய
இறைவன் அவள் பிரார்த்தனையை
அழகிய முறையில்
ஏற்றுக் கொண்டான்;. அக்குழந்தையை
அழகாக வளர்த்திடச்
செய்தான்;. அதனை
வளர்க்கும் பொறுப்பை
ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான்.
ஜகரிய்யா அவள்
இருந்த மிஹ்ராபுக்குள்
(தொழும் அறைக்குப்)
போகும் போதெல்லாம், அவளிடம்
உணவு இருப்பதைக்
கண்டார், "மர்யமே!
இ(வ்வுணவான)து உனக்கு
எங்கிருந்து வந்தது?" என்று
அவர் கேட்டார்; "இது அல்லாஹ்விடமிருந்து
கிடைத்தது - நிச்சயமாக
அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி
உணவளிக்கின்றான்" என்று
அவள்(பதில்) கூறினாள்.