[57:25]
நிச்சயமாக
நம் தூதர்களைத் தெளிவான
அத்தாட்சிகளுடன்
அனுப்பினோம், அன்றியும், மனிதர்கள்
நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன்
வேதத்தையும் (நீதத்தின்)
துலாக்கோலையும்
இறக்கினோம், இன்னும், இரும்பையும்
படைத்தோம், அதில்
கடும் அபாயமுமிருக்கிறது, எனினும் (அதில்)
மனிதர்களுக்குப்
பல பயன்களும் இருக்கின்றன
- (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய
தூதருக்கும் மறைமுகமாகவும்
உதவி செய்பவர்
எவர் என்பதையும் (சோதித்)
அறிந்து கொள்வதற்காக
அல்லாஹ் (இவ்வாறு
அருள்கிறான்); நிச்சயமாக
அல்லாஹ் பலம்
மிக்கவன், (யாவரையும்)
மிகைத்தவன்.
[57:26]
அன்றியும், திடமாக
நாமே நூஹையும், இப்ராஹீமையும்
(தூதர்களாக) அனுப்பினோம், இன்னும், அவ்விருவரின் சந்ததியில்
நுபவ்வத்தை (நபித்துவத்தை)யும்
வேதத்தையும் ஏற்படுத்தினோம், (அவர்களில்)
நேர்வழி பெற்றவர்களும்
உண்டு, எனினும் அவர்களில்
பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக
- பாவிகளாக இருந்தனர்.
[57:27]
பின்னர்
அவர்களுடைய (அடிச்) சுவடுகளின்
மீது (மற்றைய) நம்
தூதர்களைத் தொடரச்
செய்தோம், மர்யமின்
குமாரர் ஈஸாவை
(அவர்களை)த் தொடரச்
செய்து, அவருக்கு இன்ஜீலையும்
கொடுத்தோம் - அன்றியும், அவரைப்
பின்பற்றியவர்களின்
இதயங்களில் இரக்கத்தையும்
கிருபையையும்
உண்டாக்கினோம், ஆனால்
அவர்கள் தாங்களே
புதிதாக உண்டாக்கிக்
கொண்ட துறவித்தனத்தை
நாம் அவர்கள் மீது
விதிக்க வில்லை.
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை
அடைய வேண்டியேயன்றி (அவர்களே
அதனை உண்டுபண்ணிக்
கொண்டார்கள்); ஆனால்
அதைப் பேணுகிற
அளவுக்கு அவர்கள் அதைச்
சரிவரப் பேணவில்லை
அப்பால், அவர்களில்
ஈமான் கொண்டவர்களுக்கு
அவர்களுடைய (நற்)கூலியை
நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில்
பெரும் பாலோர்
ஃபாஸிக்குகளாக
- பாவிகளாகவே
இருக்கின்றனர்.
[57:28]
ஈமான்
கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு
அஞ்சி, அவனுடைய (இறுதித்)
தூதர் மீதும் ஈமான்
கொள்ளுங்கள்; அவன்தன்
கிருபையிலிருந்து
இரு மடங்கை உங்களுக்கு
வழங்கி, ஓர் ஒளியையும் உங்களுக்கு
அருள்வான், அதைக்
கொண்டு நீங்கள்
(நேர்வழி) நடப்பீர்கள், இன்னும், உங்களுக்காக
(உங்கள் குற்றங்களையும்)
அவன் மன்னிப்பான்
- அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க
கிருபை உடையவன்.
[57:29]
அல்லாஹ்வுடைய
அருள் கொடையிலிருந்து
யாதொன்றையும்
பெறத் தாங்கள்
சக்தியுடையவர்களல்லர்
என்று வேதத்தை உடையவர்கள்
எண்ணிக் கொள்ளாதிருக்கும்
பொருட்டே (இவற்றை
அவன் உங்களுக்கு அறிவிக்கின்றான்)
அன்றியும் அருள்
கொடையெல்லாம்
நிச்சயமாக அல்லாஹ்வின்
கையிலேயே இருக்கின்றது, தான்
விரும்பியவர்களுக்கு
அதனை அவன் அளிக்கின்றான்
- அல்லாஹ்வே மகத்தான
கிருபையுடையவன்.