Al-Mujâdilah
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[58:1]
நபியே!)
எவள் தன் கணவனைப் பற்றி
உம்மிடம் தர்க்தித்து, அல்லாஹ்விடமும்
முறையிட்டுக்
கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை
நிச்சயமாக அல்லாஹ்
செவியேற்றுக்
கொண்டான் - மேலும், அல்லாஹ் உங்களிருவரின்
வாக்கு வாதத்தையும்
செவியேற்றான்.
நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்)
செவியேற்பவன், (எல்லாவற்றையும்)
பார்ப்பவன்.
[58:2]
உங்களில்
சிலர் தம் மனைவியரைத் தாய்கள்" எனக்
கூறிவிடுகின்றனர், அதனால்
அவர்கள் இவர்களுடைடைய தாய்கள்" (ஆகிவிடுவது)
இல்லை இவர்களைப்
பெற்றெடுத்தவர்கள்
தாம் இவர்களுடைய தாய்கள்
ஆவார்கள் - எனினும், நிச்சயமாக
இவர்கள் சொல்லில்
வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே
கூறுகிறார்கள்
- ஆனால் நிச்சயமாக
அல்லாஹ் மிகவும்
பொறுப்பவன், மிகவும்
மன்னிப்பவன்.
[58:3]
மேலும்
எவர் தம் மனைவியரைத் தாய்களெனக்
கூறிய பின் (வருந்தித்)
தாம் கூறியதை விட்டும்
திரும்பி (மீண்டும் தாம்பத்திய
வாழ்வை நாடி)னால், அவ்விருவரும்
ஒருவரை ஒருவர்
தீண்டுவதற்கு
முன்னர் ஓர் அடிமையை
விடுவிக்க வேண்டும்.
அதனைக் கொண்டே
நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள் - மேலும், அல்லாஹ், நீங்கள்
செய்பவற்றை நன்கறிபவனாக
இருக்கின்றான்.
[58:4]
ஆனால்
(அடிமையை விடுதலை
செய்ய வசதி)
எவர் பெறவில்லையோ, அவர், அவ்விருவரும்
ஒருவரை ஒருவர்
தீண்டுவதற்கு
முன் இரண்டு
மாதங்கள் தொடர்ச்சியாக
நோன்பு நோற்க வேண்டும்; எவர்
இதற்கும் சக்தி பெறவில்லையோ, அவர்
அறுபது ஏழைகளுக்கு
உணவு அளித்தல்
- வேண்டும், நீங்கள் அல்லாஹ்வின்
மீதும் அவனுடைய
தூதர் மீதும் விசுவாசம்
கொள்வதற்காக (இவ்வாறு கட்டளையிடப்பட்டுள்ளது).
மேலும் இவை அல்லாஹ்
விதிக்கும் வரம்புகளாகும், அன்றியும், காஃபிர்களுக்கு
நோவினை செய்யும்
வேதனை உண்டு.
[58:5]
எவர்கள்
அல்லாஹ்வையும், அவனுடைய
தூதரையும் எதிர்க்கின்றார்களோ, நிச்சயமாக
அவர்கள், அவர்களுக்கு முன்னிருந்தவர்கள்
இழிவாக்கப் பட்டதைப்
போல் இழிவாக்கப்ப
படுவார்கள் - திடமாக நாம்
தெளிவான வசனங்களை
இறக்கியுள்ளோம்.
காஃபிர்களுக்கு
இழிவுபடுத்தும்
வேதனை உண்டு.
[58:6]
அல்லாஹ்
அவர்கள் அனைவரையும்உயிர்
கொடுத்து எழுப்பி, பின்னர்
அவர்கள் செய்தவற்றை
அவர்களுக்கு அறிவிக்கும்
நாளில், அவர்கள் அவற்றை
மறந்து விட்ட போதிலும், அல்லாஹ் கணக்கெடுத்து
வைத்திருக்கிறான்.
மேலும், அல்லாஹ் ஒவ்வொரு
பொருளின் மீதும் சாட்சியாக
இருக்கின்றான்.