Al-Mumtahanah
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[60:1]
ஈமான்
கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு
விரோதியாகவும்
இருப்பவர்களைப்
பிரியத்தின் காரணத்தால் இரகசியச்
செய்திகளை எடுத்துக்காட்டும்
உற்ற நண்பர்களாக்கிக்
கொள்ளாதீர்கள்; (ஏனெனில்)
உங்களிடம் வந்துள்ள
சத்திய (வேத)த்தை
அவர்கள் நிராகரிக்கிறார்கள், நீங்கள் உங்கள்
இறைவனான அல்லாஹ்வின்
மீது ஈமான் கொண்டதற்காக, இத்தூதரையும், உங்களையும் வெளியேற்றுகிறார்கள், என் பாதையில்
போரிடுவதற்காகவும், என் பொருத்தத்தை
நாடியும் நீங்கள்
புறப்பட்டிருந்தால்
(அவர்களை நண்பர்களாக்கிக்
கொள்ளாதீர்;கள், அப்போது) நீங்கள்
பிரியத்தால் அவர்களிடத்தில்
இரகசியத்தை வெளிப்படுத்தி
விடுகிறீர்கள், ஆனால், நீங்கள்
மறைத்துவைப்பதையும், நீங்கள்
வெளிப்படுத்துவதையும்
நான் நன்கு அறிந்தவன்.
மேலும், உங்களிலிருந்தும்
எவர் இதைச் செய்கிறாரோ
அவர் நேர்வழியை திட்டமாக
தவற விட்டுவிட்டார்.
[60:2]
அவர்களுக்கு
உங்கள் மீது வாய்ப்பு
கிடைத்தால், அவர்கள்
உங்களுக்கு விரோதிகளாகித்
தம் கைகளையும், தம் நாவுகளையும்
உங்களுக்குத்
தீங்கிழைப்பதற்காக
உங்கள்பால் நீட்டுவார்கள், தவிர, நீங்களும்
காஃபிர்களாக வேண்டும்
என்று பிரியப்படுவார்கள்.
[60:3]
உங்கள்
உறவினரும், உங்கள் மக்களும்
கியாம நாளில் உங்களுக்கு
எப்பயனும் அளிக்க
மாட்டார்கள்; (அந்நாளில் அல்லாஹ்)
உங்களிடையே தீர்ப்பளிப்பான், அன்றியும்
நீங்கள் செய்பவற்றை
அல்லாஹ் உற்று
நோக்கியவனாகவே
இருக்கின்றான்.
[60:4]
இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக
உங்களுக்கு ஓர்
அழகிய முன்மாதிரி
இருக்கிறது, தம் சமூகத்தாரிடம்
அவர்கள், "உங்களை
விட்டும், இன்னும்
அல்லாஹ்வையன்றி
நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள்
நிச்சயமாக நீங்கிக்
கொண்டோம்; உங்களையும்
நாங்கள் நிராகரித்து
விட்டோம், அன்றியும்
ஏகனான அல்லாஹ்
ஒருவன் மீதே நீங்கள்
நம்பிக்கை கொள்ளும்
வரை, நமக்கும் உங்களுக்குமிடையில்
பகைமையும், வெறுப்பும்
நிரந்தரமாக ஏற்பட்டு
விட்டன" என்றார்கள்.
ஆனால் இப்றாஹீம்
தம் தந்தையை நோக்கி, "அல்லாஹ்விடத்தில்
உங்களுக்காக (அவனுடைய
வேதனையிலிருந்து)
எதையும் தடுக்க எனக்குச்
சக்தி கிடையாது, ஆயினும்
உங்களுக்காக நான்
அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத்
தேடுவேன்" எனக்
கூறியதைத் தவிர
(மற்ற எல்லாவற்றிலும்
முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர்
கூறினார்); "எங்கள்
இறைவா! உன்னையே முற்றிலும்
சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்)
நாங்கள் உன்னையே
நோக்ககிறோம் மேலும், உன்னிடமே
எங்கள் மீளுதலும்
இருக்கிறது,"
[60:5]
எங்கள்
இறைவா! காஃபிர்களுக்கு, எங்களைச்
சோதனை(ப் பொருள்)
ஆக ஆக்கிவிடாதே!
எங்கள் இறைவா!
எங்களுக்கு மன்னிப்பும்
அருள்வாயாக! நிச்சயமாக
நீ (யாவரையும்)
மிகைத்தவன் ஞானம்
மிக்கவன் (என்றும்
வேண்டினார்).