[3:38]
அந்த
இடத்திலேயே ஜகரிய்யா
தம் இறைவனிடம்
பிரார்த்தனை செய்தவராகக்
கூறினார்; "இறைவனே!
உன்னிடமிருந்து எனக்காக
ஒரு பரிசுத்தமான
சந்ததியைக் கொடுத்தருள்வாயாக!
நிச்சயமாக நீ பிரார்த்தனையைச்
செவிமடுத்தருள்வோனாக
இருக்கின்றாய்."
[3:39]
அவர்
தம் அறையில் நின்று தொழுது
கொண்டிருந்தபோது, மலக்குகள்
அவரை சப்தமாக அழைத்து "நிச்சயமாக அல்லாஹ்
யஹ்யா (எனும் பெயருள்ள
மகவு குறித்து)
நன்மாராயங் கூறுகின்றான்;. அவர் அல்லாஹ்விடமிருந்து
ஒரு வார்த்தையை
மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க
நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே
நபியாகவும் இருப்பார்" எனக்
கூறினர்.
[3:40]
அவர்
கூறினார்; "என் இறைவனே!
எனக்கு எப்படி
மகன் ஒருவன் உண்டாக
முடியும்? எனக்கு
வயது அதிகமாகி (முதுமை
வந்து) விட்டது.
என் மனைவியும்
மலடாக இருக்கின்றாள்;" அதற்கு (இறைவன்), "அவ்வாறே
நடக்கும்;, அல்லாஹ்
தான் நாடியதைச்
செய்து முடிக்கின்றான்" என்று
கூறினான்.
[3:41]
என்
இறைவனே! (இதற்கான)
ஓர் அறிகுறியை
எனக்குக் கொடுத்தருள்வாயாக!
என்று (ஜகரிய்யா)
கேட்டார். அதற்கு (இறைவன்), "உமக்கு
அறிகுறியாவது, மூன்று
நாட்களுக்குச்
சைகைகள் மூலமாக அன்றி
நீர் மக்களிடம்
பேசமாட்டீர்! நீர்
உம் இறைவனை அதிகமதிகம்
நினைவு கூர்ந்து, அவனைக்
காலையிலும் மாலையிலும்
போற்றித் துதிப்பீராக!" என்று
கூறினான்.
[3:42]
(நபியே!
மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே!
நிச்சயமாக அல்லாஹ்
உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்;. உம்மைத்
தூய்மையாகவும்
ஆக்கியிருக்கிறான்; இன்னும்
உலகத்திலுள்ள
பெண்கள் யாவரையும்
விட (மேன்மையாக)
உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்" (என்றும்).
[3:43]
மர்யமே!
உம் இறைவனுக்கு
ஸுஜுது செய்தும், ருகூஃ
செய்வோருடன் ருகூஃ
செய்தும் வணக்கம்
செய்வீராக (என்றும்) கூறினர்.
[3:44]
(நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில்
நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை
நாம் உமக்கு வஹீ
மூலம் அறிவிக்கின்றோம்;. மேலும், மர்யம்
யார் பொருப்பில்
இருக்க வேண்டுமென்பதைப்
பற்றி (குறி பார்த்தறிய)
தங்கள் எழுது கோல்களை
அவர்கள் எறிந்த
போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
(இதைப்பற்றி) அவர்கள்
விவாதித்த போதும்
நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
[3:45]
மலக்குகள்
கூறினார்கள்; "மர்யமே!
நிச்சயமாக அல்லாஹ்
தன்னிடமிருந்து
வரும் ஒரு சொல்லைக்
கொண்டு உமக்கு
(ஒரு மகவு வரவிருப்பது
பற்றி) நன்மாராயங்
கூறுகிறான். அதன்
பெயர் மஸீஹ்;. மர்யமின்
மகன் ஈஸா என்பதாகும்.
அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும்
(இறைவனுக்கு) நெருங்கி
இருப்பவர்களில்
ஒருவராகவும் இருப்பார்;.