[60:12]
நபியே!
முஃமினான பெண்கள் உங்களிடம்
வந்து, அல்லாஹ்வுக்கு
எப்பொருளையும்
இணைவைப்பதில்லையென்றும், திருடுவதில்லை
என்றும், விபச்சாரம்
செய்வதில்லை என்றும், தங்கள்
பிள்ளைகளை கொல்வதில்லை
என்றும், தங்கள்
கைகளுக்கும், தங்கள்
கால்களுக்கும்
இடையில் எதனை அவர்கள்
கற்பனை செய்கிறார்களோ, அத்தகைய
அவதூறை இட்டுக்கட்டிக்
கொண்டு வருவதில்லை என்றும், மேலும்
நன்மையான (காரியத்)தில்
உமக்கு மாறு செய்வதில்லையென்றும், அவர்கள்
உம்மிடம் பைஅத்து
- வாக்குறுதி செய்தால்
அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக்
கொள்வீராக, மேலும்
அவர்களுக்காக
அல்லாஹ்விடம்
மன்னிப்புத் தேடுவீராக, நிச்சயமாக
அல்லாஹ் மிகவும்
மன்னிப்பவன், மிக்க
கிருபையுடையவன்.
[60:13]
ஈமான்
கொண்டவர்களே! அல்லாஹ் எவர்கள்
மீது கோபம் கொண்டிருக்கிறானோ, அந்தச்
சமூகத்தாருடன்
நேசம் சொள்ளாதீர்கள், ஏனெனில்
மண்ணறை வாசிகளைப்
பற்றி (எழுப்பப்பட
மாட்டார்கள் என்று) நிராகரிப்போர்
நம்பிக்கை இழந்தது
போல், மறுமையைப்
பற்றி, நிச்சயமாக
இவர்களும் நம்பிக்கை
இழந்து விட்டனர்.
As-Saff
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[61:1]
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும்
அல்லாஹ்வை தஸ்பீஹு
(துதி) செய்து கொண்டிருக்கின்றன
அவன் யாவரையும்
மிகைத்தவன், ஞானம்
மிக்கவன்.
[61:2]
ஈமான்
கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை
ஏன் சொல்கிறீர்கள்?
[61:3]
நீங்கள்
செய்யாததை நீங்கள் கூறுவது
அல்லாஹ்விடம்
பெரிதும் வெறுப்புடையதாக
இருக்கிறது.
[61:4]
எவர்கள்
ஈயத்தால் வார்க்கப்பட்ட
கெட்டியான கட்டடத்தைப்
போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய
பாதையை போரிடுகிறார்களோ, அவர்களை
நிச்சயமாக (அல்லாஹ்)
நேசிக்கின்றான்.
[61:5]
மேலும், மூஸா
தம் சமூகத்தாரிடம்; "என் சமூகத்தாரே!
நிச்சயமாக நான், உங்களிடம்
அனுப்பப்பட்ட அல்லாஹ்வின்
தூதன் என்பதை நீங்கள்
திடமாக அறிந்து
கொண்டே, ஏன் என்னை துன்புறுத்துகிறீர்கள்?" என்று
கூறிய வேளையை
(நபியே! நீர் நினைவு கூர்வீராக); ஆகவே
ஆவர்கள் (நேர்வழியிலிருந்து)
சருகிய பொழுது, அல்லாஹ் அவர்களுடைய
இருதயங்களை (நேர்வழியிலிருந்து)
சருகச் செய்தான்.
அன்றியும் - ஃபாஸிக்குகளான
- பாவம் செய்வோரான
சமூகத்தாரை அல்லாஹ்
நேர்வழியில் செலுத்தமாட்டான்.