[67:13]
மேலும், உங்கள்
சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது
அதை பகிரங்கமாக்குங்கள்
- நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும்
மிக அறிந்தவன்.
[67:14]
(அனைத்தையும்)
படைத்தவன் அறிய மாட்டானா? அவன் நுணுக்கமாக
கவனிப்பவன்; யாவற்;றையும்
நன்கு தெறிந்தவன்.
[67:15]
அவனே
உங்களுக்கு இப்பூமியை (நீங்கள்
வாழ்வதற்கு) வசதியாக
ஆக்கினான்; ஆகவே, அதன்
பல மருங்குகளிலும், நடந்து அவனுடைய
உணவிலிருந்து
புசியுங்கள்; இன்னும்
அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழவேண்டியிருக்கிறது.
[67:16]
வானத்தில்
இருப்பவன் உங்களைப் பூமியில்
சொறுகிவிடுவான்
என்பதை பற்றி நீங்கள்
அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது
(பூமி) அதிர்ந்து
நடுங்கும்.
[67:17]
அல்லது
வானத்திலிருப்பவன் உங்கள்
மீது கல்மாரியை
அனுப்புவது பற்றி
அச்சமற்று இருக்கிறீர்களா? ஆகவே, எனது எச்சரிக்கை
(செய்யப்பட்ட
வேதனை) எப்படி
என்பதை விரைவில்
நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
[67:18]
அன்றியும்
அவர்களுக்கு முன் இருந்தார்களே
அவர்களும் (நம்
வசனங்களை இவ்வாறே)
பொய்ப்பித்துக்
கொண்டிருந்தனர், என் எச்சரிக்கை
எவ்வளவு கடுமையாக
இருந்தது?
[67:19]
இறக்கைகளை
விரித்துக் கொண்டும், சேர்த்துக்
கொண்டும், இவர்களுக்கு
மேல் (வானில் பறக்கும்)
பறவைகளை இவர்கள்
பார்க்கவில்லையா? அர்ரஹ்மானைத்
தவிர (வேறு யாரும்
கீழே விழாது) அவற்றைத் தடுத்துக்
கொண்டிருக்கவில்லை
- நிச்சயமாக அவன்
ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுகிபவன்.
[67:20]
அன்றியும், அர்ரஹ்மானை
தவிர வேறு
எவர் உங்களுக்குப்
பட்டாளமாக இருந்து
கொண்டு உதவி செய்வார்? காஃபிர்கள் ஏமாற்றத்திலன்றி
வேறில்லை.
[67:21]
அல்லது, தான்
உணவளிப்பதை அவன் தடுத்துக்
கொண்டால், உங்களுக்கு
உணவளிப்பவர் யார்? அப்படியல்ல, ஆனால், இவர்கள் மாறு
செய்வதிலும் (சத்தியத்தை)
வெறுப்பதிலும்
ஆழ்ந்திருக்கின்றனர்.
[67:22]
முகம்
குப்புற விழுந்து செல்பவன்
மிக நேர்வழி அடைந்தவனா? அல்லது
நேரான பாதையில்
செவ்வையாக நடப்பவ(ன்
மிக நேர்வழி
அடைந்தவ)னா.
[67:23]
(நபியே!) நீர்
கூறுவீராக: "அவனே உங்களைப்
படைத்து உங்களுக்குச்
செவிப்புலனையும், பார்வைகளையும் இதயங்களையும்
அமைத்தான்; (எனினும்)
மிகவும் சொற்பமாகவே
நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்."
[67:24]
அவனே
உங்களைப் பூமியின்
(பல பாகங்களிலும்)
பரவச் செய்தான், அன்றியும், அவனிடமே
நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்
என்று கூறுவீராக.
[67:25]
ஆயினும், "நீங்கள் உண்மையாளர்களாக
இருந்தால், வாக்களிக்கப்பட்ட
(மறுமையான)து எப்பொழுது (வரும்)?" என்று
(காஃபிர்கள்) கேட்கிறார்கள்.
[67:26]
இதைப்
பற்றி ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடமே
தான் இருக்கிறது, தவிர, நிச்சயமாக
நான் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை
செய்பவன் தான்
என்று (நபியே!) நீர்
கூறும்.