[67:27]
எனவே, அது நெருங்கி
வருவதை அவர்கள்
காணும் போது நிராகரிப்போரின்
முகங்கள் (நிறம்
பேதலித்துக்) கெட்டுவிடும், இன்னும், "நீங்கள்
எதை வேண்டிக் கொண்டிருந்தீர்களோ, அது இது தான்" என்று
அவர்களுக்குக்
கூறப்படும்.
[67:28]
கூறுவீராக:
அல்லாஹ், என்னையும் என்னுடன்
இருப்பவர்களையும்
(நீங்கள் ஆசிப்பது
போல்) அழித்து
விட்டாலும், அல்லது (நாங்கள்
நம்புவது போல்)
அவன் எங்கள் மீது
கிருபை புரிந்தாலும், நோவினை
செய்யும் வேதனையை
விட்டு, காஃபிர்களைக்
காப்பவர் யார்
என்பதை கவனித்தீர்களா?
[67:29]
(நபியே!) நீர்
கூறும்: (எங்களைக்
காப்பவன்) அவனே
- அர்ரஹ்மான், அவன் மீதே
நாங்கள் ஈமாக்
கொண்டோம், மேலும்
அவனையே முற்றிலும்
சார்ந்திருக்கிறோம்
- எனவே, வெகு சீக்கிரத்தில் பகிரங்கமான
வழி கேட்டிலிருப்பவர்
யார் என்பதை நீங்கள்
அறிவீர்கள்!"
[67:30]
(நபியே!) நீர்
கூறும்: உங்களின்
தண்ணீர் பூமியினுள்
(உறிஞ்சப்பட்டுப்)
போய்விட்டால், அப்பொழுது
ஓடும் நீரை உங்களுக்குக்
கொண்டு வருபவன்
யார்? என்பதை கவனித்தீர்களா? என்று
(எனக்கு அறிவியுங்கள்).
Al-Qalam
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[68:1]
நூன், எழுதுகோல்
மீதும் இன்னும்
(அதன் மூலம்) அவர்கள்
எழுதுவதின் மீதும்
சத்தியமாக!
[68:2]
உம்முடைய
இறைவன் அருட்கொடையால், நீர்
பைத்தியக்காரர்
அல்லர்.
[68:3]
இன்னும், உமக்குக்
குறைவே இல்லாத
நற்கூலி நிச்சயமாக
இருக்கிறது.
[68:4]
மேலும், (நபியே)
நிச்சயமாக நீர்
மிக உயர்ந்த மகத்தான
நற்குணம் உடையவராக
இருக்கின்றீர்.
[68:5]
எனவே, வெகு
சீக்கிரத்தில் நீரும்
பார்ப்பீர்; அவர்களும்
பார்ப்பார்கள்.
[68:6]
உங்களில்
எவர் (பைத்தியமென்னும்
நோயால்) சோதனைக்குள்ளாக்கப்பட்டவர்
என்பதை.
[68:7]
உம்முடைய
இறைவன் அவனுடைய
வழியை விட்டுத்
தவறியவர்கள் யார்
என்பதை நிச்சயமாக
நன்கறிவான்; (அது போன்றே)
நேர்வழி பெற்றோரையும்
அவன் நன்கறிவான்.
[68:8]
எனவே, (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு
நீர் வழிபடாதீர்.
[68:9]
(சன்மார்க்க
போதனையை) நீர் தளர்த்தினால், தாங்களும்
தளர்ந்து போகலாம்
என்று அவர்கள்
விரும்புகின்றனர்.
[68:10]
அன்றியும், இழிவானவனான
அதிகம் சத்தியம்
செய்யும் ஒவ்வொருவனுக்கும்
நீர் வழிபடாதீர்;
[68:11]
(அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக்
கொண்டு நடப்பவன்.
[68:12]
(எப்பொழுதும்)
நன்மையானவற்றைத் தடுத்துக்
கொண்டிருப்பவன், வரம்பு
மீறிய பெரும் பாவி.
[68:13]
கடின
சித்தமுடையவன், அப்பால் இழி பிறப்புமுடையவன்.
[68:14]
பெரும்
செல்வமும், (பல) ஆண் மக்களும்
உள்ளவனாக அவனிருப்பதால்
[68:15]
நம்
வசனங்கள் அவனிடம் ஓதப்பட்டால், "இவை முன்னோர்களின்
கட்டுக்கதைகள்" என்று
அவன் கூறுகின்றான்.