[68:16]
விரைவிலேயே
அவனுடைய மூக்கின் மீது
அடையாளமிடுவோம்.
[68:17]
நிச்சயமாக
நாம் தோட்டமுடையவர்களைச்
சோதித்தது போலவே, நாம்
அவர்களைச் சோதித்தோம்.
அ(த் தோட்;டத்திற்குடைய)வர்கள்
அதிலுள்ள கனிகளை
அதிகாலையில் சென்று
பறித்து விடுவோமென்று
சத்தியம் செய்தார்கள்.
[68:18]
அல்லாஹ்
நாடினால் என்று அவர்கள்
கூறவில்லை,
[68:19]
எனவே, அவர்கள்
தூங்கிக் கொண்டிருந்த
போது உம் இறைவனிடமிருந்து
சுற்றக் கூடிய
(நெருப்பின் ஆபத்)து சுற்றி(த்
தோட்டத்தை) அழித்து
விட்டது.
[68:20]
(நெருப்புக்
கரித்து விட்ட படியால்
அத்தோட்டம்) காலையில்
கருத்த சாம்பலைப்
போல் ஆயிருந்தது.
[68:21]
(இது அறியாது)
காலையில் எழுந்த அவர்கள்
ஒருவரை ஒருவர்
அழைத்தனர்.
[68:22]
நீங்கள்
(விளைந்த) கனிகளைக் கொய்பவர்களாக
இருந்தால் உங்கள்
தோட்டத்திற்கு
அதிகாலையில் செல்லுங்கள்
(என்று கூறிக்
கொண்டனர்).
[68:23]
எனவே
அவர்கள் (பிறர்
அறியாது) மெதுவாகப்
பேசிக் கொண்டு
சென்றனர்,
[68:24]
எந்த
ஏழை எளியவரும்
இன்று உங்களிடம்
அ(த் தோட்டத்)தில்
நிச்சயமாக பிரவேசிக்கக்
கூடாது (என்று).
[68:25]
உறுதியுடன்
சக்தியுடையவர்களாக காலையில்
சென்றனர்.
[68:26]
ஆனால், அவர்கள்
அதை (தோட்டத்தை அழிந்து
போன நிலையில்)
கண்ட போது: "நிச்சயமாக
நாம் வழி தவறி
(வேறு தோட்டத்திற்கு)
வந்து விட்டோம்" என்று
கூறினார்கள்.
[68:27]
(பின்னர்
கவனித்துப் பார்த்துவிட்டு) "இல்லை! (ஏழை எளியோர்க்கு
எதுவும் கிடைக்காமற்
செய்து) நாம் தாம்
பாக்கியம் இழந்தவர்களாக
ஆகிவிட்டோம்" (என்றும்
கூறிக்கொண்டனர்.)
[68:28]
அவர்களில்
நடுநிலையுள்ள
ஒருவர் "நீங்கள்
தஸ்பீஹு செய்திருக்க
வேண்டும் என்று
நான் உங்களுக்கு கூறவில்லையா?" என்று
கூறினார்.
[68:29]
எங்கள்
இறைவன் தூயவன், நாம் தாம்
நிச்சமயாக அநியாயம்
செய்தவர்கள் ஆகிவிட்டோம்
என்றும் கூறினர்.
[68:30]
பின்னர், அவர்களில்
சிலர் சிலரை
நிந்தித்தவர்களாக
முன்னோகினர்.
[68:31]
அவர்கள்
கூறினார்கள்: "எங்களுக்குண்டான
கேடே! நிச்சயமாக
நாம் வரம்பு மீறியவர்களாக
இருந்தோம்.
[68:32]
எங்களுடைய
இறைவன் இதைவிட மேலானதை
எங்களுக்கு மாற்றித்
தரக்கூடும், நாங்கள்
(தவ்பா செய்து)
நிச்சயமாக எங்களுடைய
இறைவன் மீதே ஆதரவு
வைக்கிறோம் (எனக்
கூறினர்).
[68:33]
இவ்வாறுதான்
(இவ்வுலக) வேதனை வருகிறது, அவர்கள்
அறிந்து கொள்வார்களானால்
மறுமையின் வேதனை
(இதைவிட) மிகவும் பெரிது
(என உணர்ந்து சன்மார்க்கத்தின்
பால் திரும்புவார்கள்).
[68:34]
நிச்சயமாக, பயபக்தியுடையோருக்கு, அவர்களுடைய
இறைவனிடத்தில்
(பாக்கியமுடைய)
சுவனச் சோலைகள் உண்டு.
[68:35]
நாம்
முஸ்லிம்களை, (பாவம் செய்யும்)
குற்றவாளிகளைப்
போல் ஆக்குவோமா?
[68:36]
(சத்தியத்தை
நிராகரிப்போரே! உங்களுக்கு
என்ன நேர்ந்தது? (இரு சாராரும்
சமமென) எவ்வாறு
நீங்கள் தீர்ப்புச் செய்கிறீர்கள்?
[68:37]
அல்லது
உங்களிடம் ஏதாவது வேத(ஆதார)ம்
இருக்கின்றதா? அதில்
நீங்கள் படித்திருக்கின்றீர்களா?
[68:38]
நிச்சயமாக
நீங்கள் உங்களுக்காகத்
தெரிந்தெடுத்துக்
கொள்வதுவே (சரி)
என்று அதில் இருக்கின்றதா,
[68:39]
அல்லது, நீங்கள்
தீர்ப்புச் செய்து
கொள்வதெல்லாம்
கியாம நாள் வரை
உங்களுக்கு நிச்சயமாகக்
கிடைத்துக் கொண்டிருக்கும்
என்று நம் உறுதி
பிரமாணங்கள் உங்களிடம்
இருக்கின்றனவா?
[68:40]
(அவ்வாறெனில்)
அவர்களில் எவர் அதற்குப்
பொறுப்பேற்பவர்
என்பதை (நபியே!)
நீர் அவர்களிடம்
கேட்பீராக.
[68:41]
அல்லது
(பொறுப்பேற்க) அவர்களுக்கு
இணை வைக்கும் கூட்டாளிகள்
தாம் இருக்கின்றார்களா? அவ்வாறாயின், அவர்கள்
உண்மையாளர்களாக
இருந்தால் அவர்களுடைய
கூட்டாளிகளைக்
கொண்டு வரட்டும்.
[68:42]
கெண்டைக்
காலை விட்டு (திரை) அகற்றப்படும்
நாளில் ஸுஜூது
செய்யுமாறு (மக்கள்)
அழைக்கப்படும்
நாளில், (இவ்வுலகில்
மாறு செய்த) அவர்கள்
அதற்கும் இயலாதிருப்பார்கள்.