[71:11]
(அப்படிச்
செய்வீர்களாயின்)
அவன் உங்கள் மீது
தொடர்ந்து மழையை அனுப்புவான்.
[71:12]
அன்றியும்
அவன் உங்களுக்குப்
பொருள்களையும், புதல்வர்களையும்
கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத்
தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும்
(பெருக்கெடுத்து
ஓடுமாறு) உண்டாக்குவான்.
[71:13]
உங்களுக்கு
என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின்
மகத்துவத்தை(யும், மேன்மையையும்)
நீங்கள் உணராமலிருக்கின்றீர்கள்.
[71:14]
நிச்சயமாக
அவன் உங்களை பல
நிலைகளிலிருந்து
படைத்தான்.
[71:15]
ஏழு
வானங்களையும்
அல்லாஹ் அடுக்கடுக்காய்
எப்படிப் படைத்திருக்கின்றான்
என்பதை நீங்கள்
பார்க்கவில்லையா?
[71:16]
இன்னும்
அவற்றில் சந்திரனைப்
பிரகாசமாகவும், சூரியனை
ஒளிவிளக்காகவும்
அவனே ஆக்கியிருக்கின்றான்.
[71:17]
அல்லாஹ்வே
உங்களை பூமியிலிருந்து
சிறந்த முறையில் உருவாக்கினான்.
[71:18]
பின்னர்
அந்த பூமியிலேயே
உங்களை மீண்டும்
சேர்த்து, மற்றொருமுறை
உங்களை (அதிலிருந்து)
வெளிப்படுத்துவான்.
[71:19]
அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக
பூமியை விரிப்பாக
ஆக்கினான்.
[71:20]
அதில்
நீங்கள் செல்வதற்காக
விசாலமான பாதைகளையும்
அமைத்தான்" (என்றும் போதித்தார்).
[71:21]
நூஹ்
கூறினார்: "என் இறைவா!
நிச்சயமாக அவர்கள்
எனக்கு மாறு செய்கின்றனர், அன்றியும், எவர்களுக்கு அவர்
பொருளும், அவர்
மக்களும் நஷ்டத்தையன்றி
(வேறு எதையும்)
அதிகரிக்கவில்லையோ, அ(த்தகைய)வர்களையே
அவர்கள் பின்பற்றுகின்றனர்.
[71:22]
மேலும்
(எனக்கெதிராகப்)
பெரும் சூழ்ச்சியாகச்
சூழ்ச்சி செய்கின்றனர்.
[71:23]
மேலும்
அவர்கள்; "உங்கள் தெய்வங்களை
விட்டுவிடாதீர்கள்; இன்னும்
வத்து, ஸுவாஉ, யகூஸு, யஊக், நஸ்ரு ஆகியவற்றை
நிச்சயமாக நீங்கள்
விட்டுவிடாதீர்கள்" என்றும்
சொல்கின்றனர்.
[71:24]
நிச்சயமாக
அவர்கள் அநேகரை வழிகெடுத்துவிட்டனர், ஆகவே
இவ்வநியாயக் காரர்களுக்கு
வழி கேட்டைத் தவிர, வேறு எதையும்
நீ அதிகப்படுத்தாதே.
[71:25]
ஆகவே, அவர்கள்
தம் பாவங்களினால்
மூழ்கடிக்கப்பட்டு, பின்னால்
நரக நெருப்பிலும்
புகுத்தப்பட்டனர். எனவே, அல்லாஹ்வை
அன்றி தங்களுக்கு
உதவி செய்வோரை
அவர்கள் காணவில்லை.
[71:26]
அப்பால்
நூஹ் கூறினார்: "என் இறைவா!
பூமியின் மீது
இக்காஃபிர்களில்
எவரையும் நீ வசித்திருக்க விட்டு
விடாதே.
[71:27]
நிச்சயமாக
நீ அவர்களை விட்டு
வைப்பாயானால்.
உன் அடியார்களை
அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள்; அன்றியும், பாவிகளையும், காஃபிர்களையும்
அன்றி அவர்கள் பெற்றெடுக்கமாட்டார்கள்.
[71:28]
என்
இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில்
நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான
ஆண்களுக்கும், முஃமினான
பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக!
மேலும், அநியாயக்காரர்களுக்கு
அழிவையேயல்லாது
(வேறு எதையும்) நீ அதிகரிக்காதே" (என்றும்
கூறினார்).