Al-Jinn
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[72:1]
நிச்சயமாக, ஜின்களில்
சில (திருக் குர்ஆனை)
செவிமடுத்து(த்
தம் இனத்தாரிடம்
கூறினர்) "நிச்சயமாக நாங்கள், மிகவும்
ஆச்சரியமான ஒரு
குர்ஆனை கேட்டோம்" என்று
கூறினர், என எனக்கு
வஹீ அறிவிக்கப்பட்டதென்று
(நபியே!) நீர் கூறுவீராக.
[72:2]
அது
நேர்மையின் பால் வழிகாட்டுகிறது, ஆகவே
அதைக் கொண்டு நாங்கள்
ஈமான் கொண்டோம்; அன்றியும்
எங்கள் இறைவனுக்கு
ஒருவனையும் நாங்கள்
இணையாக்கமாட்டோம்
(என்று அந்த ஜின்
கூறலாயிற்று).
[72:3]
மேலும்
எங்கள் இறைவனுடைய
மகிமை நிச்சயமாக
மிக்க மேலானது, அவன் (எவரையும்
தன்) மனைவியாகவோ
மகனாகவோ எடுத்துக்
கொள்ளவில்லை.
[72:4]
ஆனால்
நம்மில் மூடராகிவிட்ட
(சிலர்) அல்லாஹ்வின்
மீது தகாத வார்த்தைகளை சொல்லிக்
கொண்டிருக்கின்றனர்.
[72:5]
மேலும் "மனிதர்களும் ஜின்களும்
அல்லாஹ்வின் மீது
பொய் கூறவே மாட்டார்கள்" என்று
நிச்சயமாக நாம் எண்ணிக்
கொண்டிருந்தோம்.
[72:6]
ஆனால், நிச்சயமாக
மனிதர்களிலுள்ள
ஆடவர்களில் சிலர்
ஜின்களிலுள்ள ஆடவர்கள்
சிலரிடம் காவல்
தேடிக் கொண்டிருந்தனர், இதனால்
அவர்கள், (ஜின்களிலுள்ள அவ்வாடவர்களின்)
மமதையை பெருக்கிவிட்டனர்.
[72:7]
இன்னும், நிச்சயமாக
அவர்களும் நீங்கள்
எண்ணியதைப் போலவே, அல்லாஹ்
ஒருவரையும் (மறுமையில்
உயிர்ப்பித்து)
எழுப்பமாட்டான்
என்று எண்ணிக்
கொண்டு இருந்தனர்.
[72:8]
நிச்சயமாக
நாம் வானத்தைத்
தொட்டுப் பார்த்தோம்.
அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும்
நிரப்பப்பட்டிருப்பதை, நாங்கள் கண்டோம்.
[72:9]
(முன்னர்
வானில் பேசப்படுவதைச்)
செவிமடுப்பதற்காக
(அதற்குள்ள சில)
இடங்களில் நாங்கள்
அமர்ந்திருப்போம்; ஆனால்
இப்பொழுதோ எவன்
அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ, அவன் தனக்காகக்
காத்திருக்கும்
தீப்பந்தத்தையே
கண்பான்.
[72:10]
அன்றியும், பூமியிலிருப்பவர்களுக்குத்
தீங்கு நாடப்பட்டிருக்கிறதா, அல்லது
அவர்களுடைய இறைவன்
அவர்களுக்கு நன்மையை
நாடி இருக்கிறானா
என்பதையும் நாங்கள்
நிச்சயமாக அறிய
மாட்டோம்.
[72:11]
மேலும், நிச்சயமாக
நம்மில் நல்லோரும்
இருக்கின்றனர், அப்படியல்லாதவர்களும் நம்மில்
இருக்கின்றனர், நாம்
பல்வேறு வழிகளையுடையவர்களாகவும்
இருந்தோம்.
[72:12]
அன்றியும், நிச்சயமாக
நாம் பூமியில்
அல்லாஹ்வை இயலாமலாக்க
முடியாது என்பதையும், அவனை
விட்டு ஓடி (ஒளிந்து
) கொள்வதாலும்
அவனை (எங்கேயும்) இயலாமலாக்க
முடியாதென்பதையும், நாம்
அறிந்து கொண்டோம்.
[72:13]
இன்னும், நிச்சயமாக
நாம் நேர்வழியை
(குர்ஆனை) செவிமடுத்த
போது, நாம் அதன்
மீது ஈமான்
கொண்டோம்." எனவே
எவன் தன் இறைவன்
மீது ஈமான் கொள்கிறானோ, அவன் இழப்பைப்
பற்றியும், அநீதியைப்
பற்றியும் பயப்படமாட்டான்.