Al-Muzzammil
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[73:1]
போர்வை
போர்த்திக் கொண்டிருப்பவரே!
[73:2]
இரவில்
- சிறிது நேரம் தவிர்த்து
(தொழுகைக்காக எழுந்து)
நிற்பீராக,
[73:3]
அதில்
பாதி (நேரம்) அல்லது அதில்
சிறிது குறைத்துக்
கொள்வீராக!
[73:4]
அல்லது
அதைவிடச் சற்று அதிகப்படுத்திக்
கொள்வீராக, மேலும்
குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும்
ஓதுவீராக.
[73:5]
நிச்சயமாக, நாம்
விரைவில் கனமான
உறுதியான - ஒரு
வாக்கை உம்மீது
இறக்கி வைப்போம்.
[73:6]
நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து
வணங்கு)வது (அகத்தையும்
புறத்தையும்) ஒருங்கிணைக்க
வல்லது. மேலும்
வாக்கையும் செவ்வைப்படுத்த
வல்லது.
[73:7]
நிச்சயமாகப்
பகலில் உமக்கு நெடிய
(கடினமான) வேலைகள்
இருக்கின்றன.
[73:8]
எனினும்
(இரவிலும், பகலிலும்) உம்முடைய
இறைவனின் பெயரை
தியானிப்பீராக!
இன்னும் அவனளவிலேயே
முற்றிலும் திரும்பியவராக
இருப்பீராக.
[73:9]
(அவனே)
கிழக்கிற்கும், மேற்கிற்கும்
இறைவன்; அவனைத் தவிர
வேறு நாயனில்லை
ஆகவே அவனையே நீர்
பாதுகாவலனாக ஆக்கிக்
கொள்வீராக.
[73:10]
அன்றியும், அவர்கள் (உமக்கெதிராகக்)
கூறுவதைப் பொறுத்துக்
கொள்வீராக, மேலும், அழகான
கண்ணியமான - முறையில்
அவர்களை விட்டும்
வெறுத்து ஒதுங்கி
விடுவீராக.
[73:11]
என்னையும், பொய்ப்பிப்வர்களாகிய
அந்தச் சுக வாசிகளையும்
விட்டுவிடும்; அவர்களுக்குச்
சிறிது அவகாசமும்
கொடுப்பீராக.
[73:12]
நிச்சமயாக
நம்மிடத்தில் (அவர்களுக்காக)
விலங்குகளும், நரகமும்
இருக்கின்றன.
[73:13]
(தொண்டையில்)
விக்கிக் கொள்ளும்
உணவும், நோவினை செய்யும்
வேதனையும் இருக்கின்றன.
[73:14]
அந்நாளில்
பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள்
சிதறி மணல் குவியல்களாகிவிடும்.
[73:15]
நிச்சயமாக
ஃபிர்அவ்னிடம்
தூதரை நாம்
அனுப்பியது போல், உங்களிடமும், உங்கள்
மீது சாட்சி சொல்பவராகிய
தூதரை நாம் அனுப்பி
வைத்தோம்.
[73:16]
எனினும்
ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு
மாறு செய்தான்
எனவே, அவனைக் கடினமான
பிடியாக, நாம்
பிடித்துக் கொண்டோம்.
[73:17]
எனவே, நீங்கள் நிராகரித்தீர்களானால், குழந்தைகளையும்
நரைத்தவர்களாக்கும்
அந்த நாளிலிருந்து எவ்வாறு
தப்பிக்க போகிறீர்கள்.
[73:18]
அதில்
வானம் பிளந்து
விடும் அவனுடைய
வாக்குறுதி செயல்படுத்தப்படும்.
[73:19]
நிச்சயமாக
இது நினைவூட்டும் நல்லுபபதேசமாகும்
ஆகவே எவர் விரும்புகிறாரோ
அவர் தம்முடைய
இறைவனிடம் (செல்லும் இவ்)வழியை
எடுத்துக் கொள்வாராக.