[75:20]
எனினும்
(மனிதர்களே!) நிச்சயமாக
நீங்கள் அவசரப்படுவதையே
பிரியப்படுகிறீர்கள்.
[75:21]
ஆகவேதான்
(இம்மையைப் பற்றிக் கொண்டு)
மறுமையை விட்டு
விடுகிறீர்கள்.
[75:22]
அந்நாளில்
சில முகங்கள் (மகிழ்ச்சியால்)
செழுமையாக இருக்கும்.
[75:23]
தம்முடைய
இறைவனளவில் நோக்கிய வையாக
இருக்கும்.
[75:24]
ஆனால், அந்நாளில்
வேறு சில முகங்களோ
(துக்கத்தால்)
சுண்டியிருக்கும்.
[75:25]
இடுப்பை
ஒடிக்கும் ஒரு பேராபத்து
தம்மீது ஏற்படப்
போவதாக அவை உறுதி
கொண்டிருக்கும்.
[75:26]
அவ்வாறல்ல!
(மரண வேளையில்
அவன் உயிர்)
தொண்டைக்குழியை
அடைந்து விட்டால்,
[75:27]
மந்திரிப்பவன்
யார்? எனக் கேட்கப்படுகிறது.
[75:28]
ஆனால், அவனோ
நிச்சயமாக அதுதான் தன் பிரிவு
(காலம்) என்பதை
உறுதி கொள்கிறான்.
[75:29]
இன்னும்
கெண்டைக்கால் கெண்டைக்காலுடன்
பின்னிக் கொள்ளும்.
[75:30]
உம்
இறைவன் பால் அந்நாளில் தான்
இழுத்துச் செல்லப்படுதல்
இருக்கிறது.
[75:31]
ஆனால்
(அம்மனிதனோ சன்மார்க்கத்தின்
மீது) உறுதிகொள்ளவுமில்லை, அவன்
தொழவுமில்லை.
[75:32]
ஆகவே, அவன்
பொய்ப்பித்து
முகம் திருப்பியுங்
கொண்டான்.
[75:33]
பின்னர், அவன்
தன் குடும்பத்தாரிடம்
- மமதையோடு சென்று
விட்டான்.
[75:34]
கேடு
உனக்கே! (மனிதனே! உனக்குக்)
கேடுதான்!
[75:35]
பின்னரும், உனக்கே
கேடு! அப்பாலும்
கேடுதான்.
[75:36]
வெறுமனே
விட்டுவிடப் படுவான் என்று
மனிதன் எண்ணிக்
கொள்கிறானா?
[75:37]
(கர்ப்பக்
கோளறைக்குள்) சொட்டுச்
சொட்டாய் ஊற்றப்படும்
இந்திரியத்துளியாக
அவன் இருக்கவில்லையா?
[75:38]
பின்னர்
அவன் 'அலக்' என்ற நிலையில்
இருந்தான், அப்பால்
(இறைவன் அவனைப்)
படைத்து செவ்வையாக்கினான்.
[75:39]
பின்னர்
அதிலிருந்து ஆண், பெண் என்ற
இரு ஜோடியை அவன்
உண்டாக்கினான்.
[75:40]
(இவ்வாறு
படைக்கும்) அவன் மரித்தோரை
உயிர்ப்பிக்கும்
ஆற்றல் உடையவன்
அல்லவா?
Al-Insân
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[76:1]
திட்டமாக
மனிதன் மீது காலத்தில்
ஒரு நேரம் வந்து, அதில்
அவன் இன்ன பொருள்
என்று குறிப்பிட்டுக் கூறுவற்கில்லாத
நிலையில் இருக்கவில்லையா?
[76:2]
(பின்னர்
ஆண், பெண்)
கலப்பான இந்திரியத்துளியிலிருந்து
நிச்சயமாக மனிதனை
நாமே படைத்தோம்
- அவனை நாம் சோதிப்பதற்காக, அவனைக்
கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும்
ஆக்கினோம்.
[76:3]
நிச்சயமாக, நாம்
அவனுக்கு வழியைக்
காண்பித்தோம்; (அதைப்
பின்பற்றி) நன்றி
உள்ளவனாக இருக்கின்றான்; அல்லது (அதைப்புறக்கணித்து)
நன்றியற்றவனாக
இருக்கின்றான்.
[76:4]
காஃபிர்களுக்குச் சங்கிலிகளையும், அரிகண்டங்களையும், கொழுந்து
விட்டெரியும்
நரக நெருப்பையும் நிச்சயமாக
நாம் தயார் செய்திருக்கின்றோம்.
[76:5]
நிச்சயமாக
நல்லவர்கள் (சுவர்க்கத்தில்)
குவளைகளிலிருந்து
(பானம்) அருந்துவார்கள்; அதன்
கலப்பு காஃபூராக
(கற்பூரமாக) இருக்கும்,