[76:6]
(காஃபூர்)
ஒரு சுனையாகும்; அதிலிருந்து
அல்லாஹ்வின் நல்லடியார்கள்
அருந்துவார்கள். அதை (அவர்கள்
விரும்பும் இடங்களுக்கெல்லாம்)
ஓடைகளாக ஓடச் செய்வார்கள்.
[76:7]
அவர்கள்
தாம் (தங்கள்) நேர்ச்சைகளை
நிறை வேற்றி வந்தார்கள்; (கியாம)
நாளை அவர்கள் அஞ்சி
வந்தார்கள். அதன்
தீங்கு (எங்கும்)
பரவியிருக்கும்.
[76:8]
மேலும், அ(வ்விறை)வன்
மீதுள்ள பிரியத்தினால்
ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.
[76:9]
உங்களுக்கு
நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின்
முகத்திற்காக
(அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து
பிரதிபலனையோ (அல்லது
நீங்கள்) நன்றி
செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள்
நாடவில்லை (என்று
அவர்கள் கூறுவர்).
[76:10]
எங்கள்
இறைவனிடமிருந்து, (எங்கள்)
முகங் கடுகடுத்துச்
சுண்டிவிடும்
நாளை நிச்சயமாக
நாங்கள் பயப்படுகிறோம் (என்றும்
கூறுவர்).
[76:11]
எனவே, அல்லாஹ்
அந்நாளின் தீங்கை
விட்டும் அவர்களைப்
பாதுகாத்து அவர்களுக்கு
முகச் செழுமையையும், மனமகிழ்வையும்
அளிப்பான்.
[76:12]
மேலும், அவர்கள்
பொறுமையுடன் இருந்ததற்காக
அவர்களுக்கு சுவர்க்கச்
சோலைகளையும், பட்டாடைகளையும்
அவன் நற்கூலியாகக்
கொடுத்தான்.
[76:13]
அவர்கள்
அங்குள்ள ஆசனங்களில் சாய்ந்து
(மகிழ்ந்து) இருப்பார்கள்; சூரியனையோ, கடுங்
குளிரையோ அதில்
அவர்கள் காணமாட்டார்கள்.
[76:14]
மேலும், அதன்
(மர) நிழல்கள், அவர்கள்
மீது நெருங்கியதாக
இருக்கும்; அன்றியும், அதன்
பழங்கள் மிகத்
தாழ்வாகத் தாழ்ந்திருக்கும்.
[76:15]
(பானங்கள்)
வெள்ளிப் பாத்திரங்களையும், பளிங்குக்
கிண்ணங்களையும்
(கொண்டு) அவர்கள்
மீது சுற்றிக் கொண்டு
வரப்படும்.
[76:16]
(அவை பளிங்கல்ல) வெள்ளியினாலான, பளிங்கைப்
போன்ற தெளிவான
கிண்ணங்கள். அவற்றைத்
தக்க அளவாக அமைந்திருப்பார்கள்.
[76:17]
மேலும்
அ(ச்சுவர்க்கத்)தில் ஸன்ஜபீல்
(என்னும் இஞ்சி)
கலந்த ஒரு கிண்ண(த்தில்
பான)ம் புகட்டப்படுவார்கள்.
[76:18]
'ஸல்ஸபீல்' என்ற பெயருடைய
ஓர் ஊற்றும்
அங்கு இருக்கிறது.
[76:19]
இன்னும், (அந்த சுவர்க்கவாசிகளைச்)
சுற்றி எப்போதும்
(இளமையோடு) இருக்கும்
சிறுவர்கள் (சேவை செய்து)
வருவார்கள்; அவர்களை
நீர் காண்பீரானால்
சிதறிய முத்துகளெனவே
அவர்களை நீர்
எண்ணுவீர்.
[76:20]
அன்றியும், (அங்கு)
நீர் பார்த்தீராயின், இன்ப
பாக்கியங்களையும், மாபெரும்
அரசாங்கத்தையும்
அங்கு காண்பீர்.
[76:21]
அவர்களின்
மீது ஸுன்துஸு, இஸ்தப்ரக்
போன்ற பச்சை நிற
பூம்பட்டாடைகள்
இருக்கும்; இன்னும்
அவர்கள் வெள்ளியாலாகிய
கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர், அன்றியும், அவர்களுடைய
இறைவன் அவர்களுக்குப்
பரிசுத்தமான பானமும்
புகட்டுவான்.
[76:22]
நிச்சயமாக
இது உங்களுக்கு நற்கூலியாக
இருக்கும்; உங்களுடைய
முயற்சியும் ஏற்றுக்
கொள்ளப்பட்டதாயிற்று (என்று
அவர்களிடம் கூறப்படும்).
[76:23]
நிச்சயமாக
நாம் தான் உம்மீது இந்தக்
குர்ஆனை சிறுகச்
சிறுக இறக்கி வைத்தோம்.
[76:24]
ஆகவே, உம்முடைய
இறைவனின் கட்டளைக்காகப்
பொறுமையுடன் (எதிர்
பார்த்து) இருப்பீராக, அன்றியும், அவர்களில் நின்று
எந்தப் பாவிக்கோ
அல்லது நன்றியற்றவனுக்கோ
நீர் வழிபடாதீர்.
[76:25]
காலையிலும், மாலையிலும் உம்முடைய
இறைவனின் திருநாமத்தை
தஸ்பீஹு (துதி)
செய்து கொண்டிருப்பீராக.