[76:26]
இன்னும்
இரவிலும் அவனுக்கு ஸுஜூது
செய்வீராக, அன்றியும்
இரவில் நெடுநேரம்
அவனுக்கு தஸ்பீஹு(துதி) செய்வீராக.
[76:27]
நிச்சயமாக
இவர்கள் விரைந்து சென்று
விடுவ(தான இவ்வுலகத்)தையே
நேசிக்கின்றனர், அப்பால்
பளுவான (மறுமை)
நாளைத் தங்களுக்குப்
பின்னே விட்டு(ப்
புறக்கணித்து)
விடுகின்றனர்.
[76:28]
நாமே
அவர்களைப் படைத்து அவர்களுடைய
அமைப்பையும் கெட்டிப்படுத்தினோம்; அன்றியும்
நாம் விரும்பினால் அவர்கள்
போன்றவர்களை (அவர்களுக்குப்
பதிலாக) மாற்றிக்
கொண்டு வருவோம்.
[76:29]
நிச்சயமாக
இது ஒரு நல்லுபதேசமாகும்; எனவே
யார் விரும்புகிறாரோ
அவர் தம்முடைய
இறைவன் பால் (செல்லும்)
வழியைத் தேர்ந்தெடுத்துக்
கொள்வாராக.
[76:30]
எனினும், அல்லாஹ்
நாடினாலன்றி, நீங்கள்
நாட மாட்டீர்கள்; நிச்சயமாக
அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம்
மிக்கவன்.
[76:31]
அவன், தான்
விரும்புபவரை தன்னுடைய
ரஹ்மத்தில் புகுத்துகிறான்; அன்றியும்
அநியாயக்காரர்களுக்கு
நோவினை செய்யும்
வேதனையை அவர்களுக்காகச்
சித்தம் செய்து
வைத்திருக்கின்றான்.
Al-Mursalât
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[77:1]
தொடர்ச்சியாக
அனுப்பப்படுபவை (காற்று)கள்
மீது சத்தியமாக
[77:2]
வேகமாக
வீசுகிறவை (புயல் காற்றுகள்)
மீது (சத்தியமாக)-
[77:3]
(மேகங்களைப்)
பரவலாகப் பரப்பும்
(மழைக் காற்றுகள்)
மீது சத்தியமாக-
[77:4]
(சத்தியத்தையும் அசத்தியத்தையும்)
வேறுபடுத்தி காட்டுவோர்
(வானவர்கள்) மீதும்
(சத்தியமாக)-
[77:5]
(இதயங்களில்)
உபதேசத்தைப் போடுவோர்
(வானவர்) மீதும்
(சத்தியமாக)-
[77:6]
(அந்த உபதேசம்)
மன்னிப்பையோ, அல்லது
எச்சரிக்கையையோ
(உள்ளடக்கியதாகும்)
[77:7]
நிச்சயமாக
உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது
நிகழ்வதேயாகும்.
[77:8]
இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது-
[77:9]
மேலும், வானம்
பிளக்கப்படும் போது-
[77:10]
அன்றியும், மலைகள்
(தூசிகளைப் போல்)
பறக்கடிக்கப்படும்போது-
[77:11]
மேலும், தூதர்களுக்கு(த்
தம் சமூகத்தாருக்காகச்
சாட்சியம் கூற)
நேரம் குறிக்கப்படும்போது-
[77:12]
எந்த
நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?
[77:13]
தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான்.
[77:14]
மேலும், தீர்ப்புக்குரிய
நாள் என்னவென்று
உமக்கு எது அறிவித்தது?
[77:15]
(நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு
அந்நாளில் கேடுதான்.
[77:16]
முன்னோர்(களில்
குற்றவாளி)களை நாம்
அழிக்கவில்லையா?
[77:17]
பிறகு
பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும்
(அழிந்தவர்களைப்)
பின் தொடரச் செய்வோம்.
[77:18]
குற்றவாளிகளை
இவ்வாறுதான் நாம் செய்வோம்
(தண்டிப்போம்).
[77:19]
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில்
கேடுதான்.