Al-Infitâr
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[82:1]
வானம்
பிளந்து விடும்போது
[82:2]
நட்சத்திரங்கள்
உதிர்ந்து விழும்போது-
[82:3]
கடல்கள்
(பொங்கி ஒன்றால் ஒன்று)
அகற்றப்படும்
போது,
[82:4]
கப்றுகள்
திறக்கப்படும்
போது,
[82:5]
ஒவ்வோர்
ஆத்மாவும், அது எதை முற்படுத்தி
(அனுப்பி) வைத்தது, எதைப்
பின்னே விட்டுச்
சென்றது என்பதை
அறிந்து கொள்ளும்.
[82:6]
மனிதனே!
கொடையாளனான சங்கை மிக்க
உன் இறைவனுக்கு
மாறு செய்யும்படி
உன்னை மருட்டி
விட்டது எது?
[82:7]
அவன்தான்
உன்னைப்படைத்து, உன்னை
ஒழுங்குபடுத்தி; உன்னைச்
செவ்வையாக்கினான்.
[82:8]
எந்த
வடிவத்தில் அவன் விரும்பினானோ
(அதில் உன் உறுப்புகளைப்)
பொருத்தினான்.
[82:9]
இவ்வாறிருந்தும்
நீங்கள் (கியாம)
நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.
[82:10]
நிச்சயமாக, உங்கள்
மீது பாது காவலர்கள்
(நியமிக்கப்பட்டு)
இருக்கின்றனர்.
[82:11]
(அவர்கள்)
கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.
[82:12]
நீங்கள்
செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.
[82:13]
நிச்சயமாக
நல்லவர்கள் நயீம் என்னும்
சுவர்க்கத்தில்
இருப்பார்கள்.
[82:14]
இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள்
நரகத்தில் இருப்பார்கள்.
[82:15]
நியாயத்தீர்ப்பு
நாளில் அவர்கள்
அதில் பிரவேசிப்பார்கள்.
[82:16]
மேலும், அவர்கள்
அதிலிருந்து (தப்பித்து)
மறைந்து விட மாட்டார்கள்.
[82:17]
நியாயத்
தீர்ப்பு நாள்
என்ன வென்று
உமக்கு அறிவிப்பது
எது?
[82:18]
பின்னும்
- நியாயத் தீர்ப்பு நாள்
என்ன என்று உமக்கு
அறிவிப்பது எது?
[82:19]
அந்நாளில்
ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு
எதுவும் செய்ய
சக்தி பெறாது, அதிகாரம்
முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.
Al-Mutaffifîn
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[83:1]
அளவு
(எடையில்) மோசம் செய்பவர்களுக்கு
கேடுதான்.
[83:2]
அவர்கள்
மனிதர்களிடமிருந்து அளந்து
வாங்கும் போது
நிறைவாக அளந்து
வாங்குகின்றனர்.
[83:3]
ஆனால், அவர்கள்
அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது
குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.
[83:4]
நிச்சயமாக
அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை
அவர்கள் கருத்தில்
கொள்ளவில்லையா?
[83:5]
மகத்தான
ஒரு நாளுக்காக,
[83:6]
அகிலத்தாரின்
இறைவன் முன் மனிதர்கள்
நிற்கும் நாள்-