[83:7]
ஆகவே, நிச்சயமாக
தீயோர்களின் பதிவேடு
ஸிஜ்ஜீனில் இருக்கிறது
[83:8]
'ஸிஜ்ஜீன்' என்பது
என்னவென்று உமக்கு
எது அறிவிக்கும்?
[83:9]
அது
(செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும்.
[83:10]
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில்
கேடுதான்.
[83:11]
அவர்கள்
நியாயத் தீர்ப்பு நாளையும்
பொய்ப்பிக்கிறார்கள்.
[83:12]
வரம்பு
மீறிய, பெரும் பாவியைத் தவிர
வேறெவரும் அதைப்
பொய்ப்பிக்க மாட்டார்.
[83:13]
நம்முடைய
வசனங்கள் அவனுக்கு ஓதிக்
காண்பிக்கப்பட்டால், "அவை முன்னோர்களின்
கட்டுக் கதைகளே" என்று கூறுகின்றான்.
[83:14]
அப்படியல்ல:
அவர்கள் சம்பாதித்துக்
கொண்டிருந்தவை
அவர்களுடைய இருதயங்கள்
மீது துருவாகப்
படிந்து விட்டன.
[83:15]
(தீர்ப்புக்குரிய)
அந்நாளில் அவர்கள்
தங்கள் இறைவனை
விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள்.
[83:16]
பின்னர்
நிச்சயமாக அவர்கள் நரகில்
புகுவார்கள்.
[83:17]
எதை
நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு
இருந்தீர்களோ, அதுதான்
இது என்று பின்
அவர்களுக்குச்
சொல்லப்படும்.
[83:18]
நிச்சயமாக
நல்லோர்களின் பதிவேடும் "இல்லிய்யீ"னில்
இருக்கிறது.
[83:19]
இல்லிய்யுன்' என்பது
என்னவென்று உமக்கு
எது அறிவிக்கும்?
[83:20]
(அது) செயல்கள்
எழுதப்பட்ட ஏடாகும்.
[83:21]
(அல்லாஹ்விடம்)
நெருங்கிய (கண்ணியம்
மிக்க வான)வர்கள்
அதை பார்ப்பார்கள்.
[83:22]
நிச்சயமாக
அப்ரார்கள் (நல்லவர்கள்)
'நயீம்' என்னும்
சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
[83:23]
ஆசனங்களில்
அமர்ந்து (சுவர்க்கக்
காட்சிகளைப்) பார்ப்பார்கள்.
[83:24]
அவர்களுடைய
முகங்களிலிருந்தே
(அவர்களுக்குக்
கிட்டிய) பாக்கியத்தின்
செழுமையை நீர்
அறிவீர்.
[83:25]
(பரிசுத்த)
முத்திரையிடப்பட்ட
தெளிவான (போதையோ, களங்கமோ
அற்ற) மதுவிலிருந்து அவர்கள்
புகட்டப்படுவார்கள்.
[83:26]
அதன்
முத்திரை கஸ்தூரியாகும், எனவே
(அதற்காக) ஆர்வம்
கொள்பவர்கள், (அதைப் பெற்றுக்
கொள்வதற்கான நல்ல
அமல்களில்) ஆர்வம்
கொள்ளட்டும்.
[83:27]
இன்னும், அதனுடைய
கலவை தஸ்னீமில்
நின்றுள்ளதாகும்.
[83:28]
அது
(தஸ்னீம், ஓர் இனிய)
நீர்ச்சுனையாகும்.
அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்)
முகர்ரபுகள் அருந்துவார்கள்.
[83:29]
நிச்சயமாக, குற்றமிழைத்தார்களே
அவர்கள், ஈமான்
கொண்டவர்களைப்
பார்த்து (உலகில்)
சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
[83:30]
அன்றியும், அவர்கள்
அண்மையில் சென்றால், (ஏளனமாக)
ஒருவருக்கொருவர்
கண்சாடை செய்துகொள்வார்கள்.
[83:31]
இன்னும்
அவர்கள் தம் குடும்பத்தார்பால்
திரும்பிச் சென்றாலும், (தாங்கள் செய்தது
பற்றி) மகிழ்வுடனேயே
திரும்பிச் செல்வார்கள்.
[83:32]
மேலும்
அவர்கள் (முஃமின்களைப்)
பார்த்தால், நிச்சமயாக
இவர்களே வழி தவறியவர்கள்" என்றும்
கூறுவார்கள்.
[83:33]
(முஃமின்களின்
மீது) அவர்கள் பாதுகாவலர்களாக
அனுப்பப்படவில்லையே!
[83:34]
ஆனால்
(மறுமை) நாளில்
ஈமான் கொண்டவர்கள்
காஃபிர்களைப்
பார்த்து சிரிப்பார்கள்.