Al-Burûj
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[85:1]
கிரகங்களுடைய
வானத்தின் மீது சத்தியமாக,
[85:2]
இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி)
நாள் மீதும் சத்தியமாக,
[85:3]
மேலும், சாட்சிகள்
மீதும், சாட்சி சொல்லப்படுவதன்
மீதும் சத்தியமாக,
[85:4]
(நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள்
கொல்லப்பட்டனர்.
[85:5]
விறகுகள்
போட்டு எரித்த
பெரும் நெருப்புக்
(குண்டம்).
[85:6]
அவர்கள்
அதன்பால் உட்கார்ந்திருந்த
போது,
[85:7]
முஃமின்களை
அவர்கள் (நெருப்புக்
குண்டத்தில் போட்டு
வேதனை) செய்ததற்கு
அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.
[85:8]
(யாவரையும்)
மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய
அல்லாஹ்வின் மீது
அவர்கள் ஈமான்
கொண்டார்கள் என்பதற்காக
அன்றி வேறெதற்கும்
அவர்களைப் பழி
வாங்கவில்லை.
[85:9]
வானங்கள், பூமியின்
ஆட்சி அவனுக்கே
உரியது, எனவே அல்லாஹ்
அனைத்துப் பொருள்கள்
மீதும் சாட்சியாக இருக்கிறான்.
[85:10]
நிச்சயமாக, எவர்கள்
முஃமினான ஆண்களையும், முஃமினான
பெண்களையும் துன்புறுத்திப்
பின்னர், தவ்பா
செய்யவில்லையோ அவர்களுக்கு
நரக வேதனை உண்டு
மேலும், கரித்துப்
பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு
உண்டு.
[85:11]
ஆனால்
எவர்கள் ஈமான்
கொண்டு, ஸாலிஹான (நல்ல)
அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச்
சுவர்க்கச் சோலைகள்
உண்டு, அவற்றின் கீழ்
நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்
- அதுவே மாபெரும்
பாக்கியமாகும்.
[85:12]
நிச்சயமாக, உம்முடைய
இறைவனின் பிடி
மிகவும் கடினமானது.
[85:13]
நிச்சயமாக, அவனே
ஆதியில் உற்பத்தி
செய்தான், மேலும்
(மரணத்தற்குப்
பின்னும்) மீள
வைக்கிறான்.
[85:14]
அன்றியும், அவன்
மிகவும் மன்னிப்பவன்; மிக்க
அன்புடையவன்.
[85:15]
(அவனே)
அர்ஷுக்குடையவன் பெருந்தன்மை
மிக்கவன்.
[85:16]
தான்
விரும்பியவற்றைச் செய்கிறவன்.
[85:17]
(நபியே!) அந்தப்
படைகளின் செய்தி
உமக்கு வந்ததா,
[85:18]
ஃபிர்அவ்னுடையவும், ஸமூதுடையவும்,
[85:19]
எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே
இருக்கின்றனர்.
[85:20]
ஆனால், அல்லாஹ்வோ
அவர்களை முற்றிலும்
சூழ்ந்திருக்கிறான்.
[85:21]
(நிராகரிப்போர்
எவ்வளவு முயன்றாலும்)
இது பெருமை பொருந்திய
குர்ஆனாக இருக்கும்.
[85:22]
(எவ்வித
மாற்றத்துக்கும் இடமில்லாமல்)
லவ்ஹுல் மஹ்ஃபூளில்
- பதிவாகி பாது
காக்கப்பட்டதாக
இருக்கிறது.