[87:15]
மேலும், அவன்
தன் இறைவனுடைய நாமத்தைத்
துதித்துக் கொண்டும், தொழுது
கொண்டும் இருப்பான்.
[87:16]
எனினும், நீங்களோ
(மறுமையை விட்டு
விட்டு) இவ்வுலக
வாழ்வைத் தேர்ந்தெடுத்துக்
கொள்கிறீர்கள்.
[87:17]
ஆனால்
மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும்
நிலைத்திருப்பதும்
ஆகும்.
[87:18]
நிச்யசமாக
இது முந்திய ஆகமங்களிலும்-
[87:19]
இப்றாஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும்
(இவ்வாறே அறிவிப்பு)
இருக்கிறது.
Al-Ghâshiyah
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[88:1]
சூழந்து
மூடிக்கொள்வதின் (கியாம
நாளின்) செய்தி
உமக்கு வந்ததா?
[88:2]
அந்நாளில்
சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.
[88:3]
அவை
(தவறான காரியங்களை
நல்லவை என கருதி)
செயல்பட்டவையும்
(அதிலேயே) உறுதியாக
நின்றவையுமாகும்.
[88:4]
கொழுந்து
விட்டெறியும் நெருப்பில்
அவை புகும்.
[88:5]
கொதிக்கும்
ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு)
நீர் புகட்டப்படும்.
[88:6]
அவர்களுக்கு
விஷச் செடிகளைத் தவிர, வேறு
உணவில்லை.
[88:7]
அது
அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும்
வைக்காது, அன்றியும்
பசியையும் தணிக்காது.
[88:8]
அந்நாளில்
சில முகங்கள் செழுமையாக
இருக்கும்.
[88:9]
தம்
முயற்சி (நற்பயன் அடைந்தது)
பற்றி திருப்தியுடன்
இருக்கும்.
[88:10]
உன்னதமான
சுவர்க்கச் சோலையில்-
[88:11]
அதில்
யாதொரு பயனற்ற சொல்லையும்
அவை செவியுறுவதில்லை.
[88:12]
அதில்
ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று
உண்டு.
[88:13]
அதில்
உயர்ந்த ஆசனங்கள்
உண்டு.
[88:14]
(அருந்தக்)
குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.
[88:15]
மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள
திண்டுகளும்-
[88:16]
விரிக்கப்பட்ட
உயர்ந்த கம்பளங்களும்
உண்டு.
[88:17]
(நபியே!) ஒட்டகத்தை
அவர்கள் கவனிக்க
வேண்டாமா? அது எவ்வாறு
படைக்கப்பட்டிருக்கிறது
என்று-
[88:18]
மேலும்
வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,
[88:19]
இன்னும்
மலைகளையும் அவை
எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,
[88:20]
இன்னும்
பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும்
அவர்கள் கவனிக்க
வேண்டாமா?)
[88:21]
ஆகவே, (நபியே!
இவற்றைக் கொண்டு)
நீர் நல்லுபதேசம்
செய்வீராக, நிச்சயமாக
நீர் நல்லுபதேசம்
செய்பவர் தாம்.
[88:22]
அவர்கள்
மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர்
அல்லர்.
[88:23]
ஆயினும், எவன்
(சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும்
நிராகரிக்கின்றானோ-
[88:24]
அவனை
அல்லாஹ் மிகப்
பெரும் வேதனையைக்
கொண்டு வேதனைப்படுத்துவான்.
[88:25]
நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய
மீளுதல் இருக்கிறது.
[88:26]
பின்னர், நிச்சயமாக
நம்மிடமே அவர்களைக்
கேள்வி கணக்கு
கேட்பதும் இருக்கிறது.