Al-Fajr
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[89:1]
விடியற்
காலையின் மீது சத்தியமாக,
[89:2]
பத்து
இரவுகளின் மீது சத்தியமாக,
[89:3]
இரட்டையின்
மீதும், ஒற்றையின் மீதும்
சத்தியமாக,
[89:4]
செல்கின்ற
இரவின் மீதும், சத்தியமாக,
[89:5]
இதில்
அறிவுடையோருக்கு (போதுமான)
சத்தியம் இருக்கிறதல்லவா?
[89:6]
உம்முடைய
இறைவன் ஆ(து கூட்டத்)தை
என்ன செய்தான்
என்பதை நீர் பார்க்கவில்லையா?
[89:7]
(அவர்கள்)
தூண்களையுடைய
'இரம்' (நகர) வாசிகள்,
[89:8]
அவர்கள்
போன்ற ஒரு சமுதாயம் எந்த
நாடுகளிலும் படைக்கப்படவில்லை.
[89:9]
பள்ளத்தாக்குகளில்
பாறைகளைக் குடைந்(து
வசித்து வந்)த
ஸமூது கூட்டத்தையும்
(என்ன செய்தான்
என்று பார்க்கவில்லையா?)
[89:10]
மேலும், பெரும்
படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும்
(உம் இறைவன் என்ன
செய்தான் என்பதை
நீர் பார்க்கவில்லையா?)
[89:11]
அவர்களெல்லாம்
நாடுகளில் வரம்பு
மீறி நடந்தனர்.
[89:12]
அன்றியும், அவற்றில் குழப்பத்தை
அதிகப்படுத்தினர்.
[89:13]
எனவே, உம்முடைய
இறைவன் அவர்கள் மேல்
வேதனையின் சாட்டையை
எறிந்தான்.
[89:14]
நிச்சயமாக, உம்முடைய
இறைவன் கண்காணித்துக்
கொண்டு இருக்கிறன்றான்.
[89:15]
ஆனால், இறைவன்
மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம்
அளித்து அவனைச்
சோதிக்கும் போது
அவன்; "என் இறைவன்
என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்" என்று
கூறுகிறான்.
[89:16]
எனினும்
அவனுடைய உணவு வசதிகளைக்
குறைத்து, அவனை
(இறைவன்) சோதித்தாலோ, அவன், "என் இறைவன்
என்னைச் சிறுமைப்
படுத்தி விட்டான்" எனக்
கூறுகின்றான்.
[89:17]
அப்படியல்ல!
நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது
இல்லை.
[89:18]
ஏழைக்கு
உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.
[89:19]
இன்னும்
(பிறருடைய) அநந்தரச் சொத்துக்களையும்
(சேர்த்து) உண்டு
வருகின்றீர்கள்.
[89:20]
இன்னும், பொருளை
அளவு கடந்து பிரியத்துடன்
நேசிக்கின்றீர்கள்.
[89:21]
அப்படியல்ல!
பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும்
போது,
[89:22]
உம்முடைய
இறைவனும், வானவரும் அணியணியாக
வரும்போது,
[89:23]
அந்நாளில்
நரகம் முன் கொண்டு வரப்படும்
போது - அந்நாளில்
மனிதன் உணர்வு
பெறுவான்; அந்த
(நாளில்) உணர்வு (பெறுவதினால்)
அவனுக்கு என்ன
பலன்.