[92:15]
மிக்க
துர்ப்பாக்கியமுள்ளவனைத் தவிர
(வேறு) எவனும் அதில்
புகமாட்டான்.
[92:16]
எத்தகையவனென்றால்
அவன் (நம் வசனங்களைப்)
பொய்யாக்கி, முகம்
திரும்பினான்.
[92:17]
ஆனால்
பயபக்தியுடையவர்
தாம் அ(ந்நரகத்)திலிருந்து
தொலைவிலாக்கப்படுவார்.
[92:18]
(அவர் எத்தகையோரென்றால்)
தம்மை தூய்மைப்
படுத்தியவராகத்
தம் பொருளை (இறைவன்
பாதையில்) கொடுக்கிறார்.
[92:19]
மேலும், தாம்
பதில் (ஈடு) செய்யுமாறு
பிறருடைய உபகாரமும்
தம் மீது இல்லாதிருந்தும்.
[92:20]
மகா
மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை
நாடியே (அவர் தானம்
கொடுக்கிறார்).
[92:21]
வெகு
விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின்
அருள் கொடையால்)
திருப்தி பெறுவார்.
Ad-Dhuhâ
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[93:1]
முற்பகல்
மீது சத்தியமாக
[93:2]
ஒடுங்கிக்
கொள்ளும் இரவின் மீது
சத்தியமாக-
[93:3]
உம்முடைய
இறைவன் உம்மைக்
கை விடவுமில்லை; அவன்
(உம்மை) வெறுக்கவுமில்லை.
[93:4]
மேலும்
பிந்தியது (மறுமை) முந்தியதை
(இம்மையை) விட உமக்கு
மேலானதாகும்.
[93:5]
இன்னும், உம்முடைய
இறைவன் வெகு சீக்கிரம்
உமக்கு (உயர் பதவிகளைக்)
கொடுப்பான்; அப்பொழுது
நீர் திருப்தியடைவீர்.
[93:6]
(நபியே!) அவன்
உம்மை அநாதையாகக்
கண்டு, அப்பால் (உமக்குப்)
புகலிடமளிக்கவில்லையா?
[93:7]
இன்னும், உம்மை
வழியற்றவராகக் கண்டு
அவன், (உம்மை) நேர்வழியில்
செலுத்தினான்.
[93:8]
மேலும், அவன்
உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச்
செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
[93:9]
எனவே, நீர்
அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
[93:10]
யாசிப்போரை
விரட்டாதீர்.
[93:11]
மேலும், உம்முடைய
இறைவனின் அருட்கொடையைப்
பற்றி (பிறருக்கு)
அறிவித்துக் கொண்டிருப்பீராக.
Al-Sharh
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[94:1]
நாம், உம் இதயத்தை
உமக்காக விரிவாக்கவில்லையா?
[94:2]
மேலும், நாம்
உம்மை விட்டும் உம் சுமையை
இறக்கினோம்.
[94:3]
அது
உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது.
[94:4]
மேலும், நாம்
உமக்காக உம்முடைய புகழை
மேலோங்கச் செய்தோம்.
[94:5]
ஆதலின்
நிச்சயமாகத் துன்பத்துடன்
இன்பம் இருக்கிறது.
[94:6]
நிச்சயமாக
துன்பத்துடன்
இன்பம் இருக்கிறது.
[94:7]
எனவே, (வேலைகளிலிருந்து)
நீர் ஓய்ந்ததும்
(இறைவழியிலும், வணக்கத்திலும்)
முயல்வீராக.
[94:8]
மேலும், முழு
மனத்துடன் உம் இறைவன்
பால் சார்ந்து
விடுவீராக.