[98:8]
அவர்களுடைய
நற்கூலி, அவர்களுடைய
இறைவனிடத்திலுள்ள
அத்னு என்னும்
சுவர்க்கச் சோலைகளாகும்.
அவற்றின் கீழே
ஆறுகள் ஓடிக்கொண்டு
இருக்கும்; அவற்றில்
அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும்
அவர்களைப் பற்றி, திருப்தி
அடைவான், அவர்களும் அவனைப்பற்றி
திருப்தி அடைவார்கள்; தன் இறைவனுக்குப்
பயப்படுகிறாரே அத்தகையவருக்கே
இந்த மேலான நிலை
உண்டாகும்.
Al-Zalzalah
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[99:1]
பூமி
பெரும் அதிர்ச்சியாக
- அதிர்ச்சி
அடையும் போது
[99:2]
இன்னும், பூமி
தன் சுமைகளை வெளிப்படுத்தும்
போது-
[99:3]
அதற்கு
என்ன நேர்ந்தது? என்று மனிதன்
கேட்கும் போது-
[99:4]
அந்நாளில், அது தன்
செய்திகளை அறிவிக்கும்.
[99:5]
(அவ்வாறு
அறிவிக்குமாறு) உம்முடைய
இறைவன் அதற்கு
வஹீ மூலம் அறித்ததனால்.
[99:6]
அந்நாளில், மக்கள்
தங்கள் வினைகள்
காண்பிக்கப்படும்
பொருட்டு, பல பிரிவினர்களாகப்
பிரிந்து வருவார்கள்.
[99:7]
எனவே, எவர்
ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும்
அத(ற்குரிய பல)னை
அவர் கண்டு கொள்வார்.
[99:8]
அன்றியும், எவன்
ஓர் அனுவளவு தீமை
செய்திருந்தாலும், அ(தற்குரிய
பல)னையும் அவன்
கண்டு கொள்வான்.
Al-‘Adiyât
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[100:1]
மூச்சுத்திணற
விரைந்து ஓடுபவற்றின்
(குதிரைகள்) மீது
சத்தியமாக-
[100:2]
பின்னர், (குளம்பை)
அடித்து நெருப்புப்
பறக்கச் செய்பவற்றின்
மீதும்,
[100:3]
பின்னர், அதிகாலையில்
விரைந்து (எதிரிகள்
மீது) பாய்ந்து
செல்பவற்றின்
மீதும்-
[100:4]
மேலும், அதனால்
புழுதியைக் கிளப்புகின்றவற்றின்
மீதும்,
[100:5]
அப்பால்
(பகைப்படையின்) மத்தியில்
கூட்டமாக நுழைந்து
செல்பவற்றின்
மீதும் சத்தியமாக-
[100:6]
நிச்சயமாக, மனிதன்
தன் இறைவனுக்கு
நன்றி கெட்டவனாக
இருக்கின்றான்.
[100:7]
அன்றியும், நிச்சயமாக
அவனே இதற்குச்
சாட்சியாகவும்
இருக்கின்றான்.
[100:8]
இன்னும், நிச்சயமாக
அவன் பொருளை
நேசிப்பதில் அளவு
கடந்தே இருக்கின்றான்.
[100:9]
அவன்
அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை
எழுப்பப்படும்
போது-