[100:10]
மேலும், இதயங்களில்
உள்ளவை வெளியாக்கப்படும்
போது-
[100:11]
நிச்சயமாக, அவர்களுடைய
இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில்
நன்கறிந்தவன்.
Al-Qâri‘ah
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[101:1]
திடுக்கிடச்
செய்யும் (நிகழ்ச்சி).
[101:2]
திடுக்கிடச்
செய்யும் (நிகழ்ச்சி)
என்ன?
[101:3]
திடுக்கிடச்
செய்யும் (நிகழ்ச்சி)
என்ன வென்று உமக்கு
எது அறிவித்தது?
[101:4]
அந்நாளில்
சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப்
போன்று மனிதர்கள்
ஆகிவிடுவார்கள்.
[101:5]
மேலும், மலைகள்
கொட்டப்பட்ட பஞ்சைப்
போன்று ஆகிவிடும்.
[101:6]
எனவே, (அந்நாளில்)
எவருடைய (நன்மையின்)
நிறை கனத்ததோ-
[101:7]
அவர்
திருப்தி பொருந்திய வாழ்வில்
இருப்பார்.
[101:8]
ஆனால்
எவனுடைய (நன்மையின்) நிறை
இலேசாக இருக்கிறதோ-
[101:9]
அவன்
தங்குமிடம் "ஹாவியா" தான்.
[101:10]
இன்னும்
('ஹாவியா') என்ன
என்று உமக்கு
அறிவித்தது எது?
[101:11]
அது
சுட்டெரிக்கும் (நரகத்தின்)
தீக்கிடங்காகும்.
At-Takâthur
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[102:1]
செல்வத்தைப்
பெருக்கும் ஆசை உங்களை
(அல்லாஹ்வை விட்டும்)
பராக்காக்கி விட்டது-
[102:2]
நீங்கள்
கப்றுகளைச் சந்திக்கும்
வரை.
[102:3]
அவ்வாறில்லை, விரைவில்
(அதன் பலனை)
நீங்கள் அறிந்து
கொள்வீர்கள்.
[102:4]
பின்னர்
அவ்வாறல்ல, விரைவில் (அதன்
பலனை) நீங்கள்
அறிந்து கொள்வீர்கள்.
[102:5]
அவ்வாறல்ல
- மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால்
(அந்த ஆசை உங்களைப்
பராக்காக்காது).
[102:6]
நிச்சயமாக
(அவ்வாசையால்) நீங்கள்
நரகத்தைப் பார்ப்பீர்கள்.
[102:7]
பின்னும், நீங்கள்
அதை உறுதியாகக்
கண்ணால் பார்ப்பீர்கள்.
[102:8]
பின்னர்
அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு
அளிக்கப்பட்டிருந்த)
அருட் கொடைகளைப்
பற்றி நிச்சயமாக
நீங்கள் கேட்கப்படுவீர்கள்.