Al-‘Asr
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[103:1]
காலத்தின்
மீது சத்தியமாக.
[103:2]
நிச்சயமாக
மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
[103:3]
ஆயினும், எவர்கள்
ஈமான் கொண்டு ஸாலிஹான
(நல்ல) அமல்கள்
செய்து, சத்தியத்தைக்
கொண்டு ஒருவருக்கொருவர்
உபதேசம் செய்து, மேலும்
பொறுமையைக் கொண்டும்
ஒருவருக்கொருவர்
உபதேசிக்கிறார்களோ அவர்களைத்
தவிர (அவர்கள்
நஷ்டத்திலில்லை).
Al-Humazah
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[104:1]
குறை
சொல்லிப் புறம்
பேசித் திரியும்
ஒவ்வொருவனுக்கும்
கேடுதான்.
[104:2]
(அத்தகையவன்
செல்வமே சாசுவதமென எண்ணிப்)
பொருளைச் சேகரித்து
எண்ணிக் கொண்டே
இருக்கின்றான்.
[104:3]
நிச்சயமாகத், தன் பொருள்
தன்னை (உலகில்
நித்தியனாக) என்றும்
நிலைத்திருக்கச்
செய்யுமென்று
அவன் எண்ணுகிறான்.
[104:4]
அப்படியல்ல, நிச்சயமாக
அவன் ஹுதமாவில்
எறியப்படுவான்.
[104:5]
ஹுதமா
என்ன என்பதை உமக்கு அறிவித்தது
எது?
[104:6]
அது
எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின்
நெருப்பாகும்.
[104:7]
அது
(உடலில் பட்டதும்) இருதயங்களில்
பாயும்.
[104:8]
நிச்சயமாக
அது அவர்களைச் சூழ்ந்து
மூட்டப்படும்.
[104:9]
நீண்ட
கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).
Al-Fîl
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[105:1]
(நபியே!) யானை(ப்
படை)க் காரர்களை
உம் இறைவன் என்ன
செய்தான் என்பதை
நீர் பார்க்கவில்லையா?
[105:2]
அவர்களுடைய
சூழ்ச்சியை அவன் பாழாக்கி
விடவில்லையா?
[105:3]
மேலும், அவர்கள்
மீது பறவைகளைக்
கூட்டங் கூட்டமாக
அவன் அனுப்பினான்.
[105:4]
சுடப்பட்ட
சிறு கற்களை அவர்கள் மீது
அவை எறிந்தன.
[105:5]
அதனால், அவர்களை
மென்று தின்னப்பட்ட
வைக்கோலைப் போல்
அவன் ஆக்கி விட்டான்.