Quraysh
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[106:1]
குறைஷிகளுக்கு
விருப்பம் உண்டாக்கி,
[106:2]
மாரி
காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும்
பிரயாணத்தில்
அவர்களுக்கு மன
விருப்பத்தை உண்டாக்கியமைக்காக-
[106:3]
இவ்வீட்டின்
(கஅபாவின்) இறைவனை அவர்கள்
வணங்குவார்களாக.
[106:4]
அவனே, அவர்களுக்கு
பசிக்கு உணவளித்தான்; மேலும்
அவர்களுக்கு அச்சத்திலிருந்தும்
அபயமளித்தான்.
Al-Mâ‘ûn
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[107:1]
(நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே
அவனை நீர் பார்த்தீரா?
[107:2]
பின்னர்
அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
[107:3]
மேலும், ஏழைக்கு
உணவளிப்பதின் பேரிலும்
அவன் தூண்டுவதில்லை.
[107:4]
இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக்
கேடுதான்.
[107:5]
அவர்கள்
எத்தகையோர் என்றால் தம் தொழுகையில்
பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும்
இருப்போர்.
[107:6]
அவர்கள்
பிறருக்குக் காண்பிக்(கவே
தான் தொழு)கிறார்கள்.
[107:7]
மேலும், அற்பமான
(புழங்கும்) பொருள்களைக்
(கொடுப்பதை விட்டும்)
தடுக்கிறார்கள்.
Al-Kawthar
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[108:1]
(நபியே!) நிச்சயமாக
நாம் உமக்கு
கவ்ஸர் (என்ற தடாகத்தை)
கொடுத்திருக்கின்றோம்.
[108:2]
எனவே, உம் இறைவனுக்கு
நீர் தொழுது, குர்பானியும்
கொடுப்பீராக.
[108:3]
நிச்சயமாக
உம்முடைய பகைவன் (எவனோ)
அவன்தான் சந்ததியற்றவன்.