Al-Kâfirûn
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[109:1]
(நபியே!) நீர்
சொல்வீராக: "காஃபிர்களே!
[109:2]
நீங்கள்
வணங்குபவற்றை
நான் வணங்கமாட்டேன்.
[109:3]
இன்னும், நான்
வணங்குகிறவனை நீங்கள்
வணங்குகிறவர்களல்லர்.
[109:4]
அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை
நான் வணங்குபவனல்லன்.
[109:5]
மேலும், நான்
வணங்குபவனை நீங்கள்
வணங்குபவர்கள்
அல்லர்.
[109:6]
உங்களுக்கு
உங்களுடைய மார்க்கம்; எனக்கு
என்னுடைய மார்க்கம்."
An-Nasr
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[110:1]
அல்லாஹ்வுடைய
உதவியும், வெற்றியும்
வரும்போதும்,
[110:2]
மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில்
மக்கள் அணியணியாகப்
பிரவேசிப்பதை
நீங்கள் காணும்
போதும்,
[110:3]
உம்முடைய
இறைவனின் புகழைக் கொண்டு
(துதித்து) தஸ்பீஹு
செய்வீராக, மேலும்
அவனிடம் பிழை பொறுக்கத்
தேடுவீராக - நிச்சயமாக
அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக்
கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக
இருக்கின்றான்.
Al-Masad
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[111:1]
அபூலஹபின்
இரண்டு கைகளும் நாசமடைக, அவனும்
நாசமாகட்டும்.
[111:2]
அவனுடைய
பொருளும், அவன் சம்பாதித்தவையும்
அவனுக்குப் பயன்படவில்லை.
[111:3]
விரைவில்
அவன் கொழுந்து விட்டெரியும்
நெருப்பில் புகுவான்.
[111:4]
விறகு
சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
[111:5]
அவளுடைய
கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்
கயிறுதான் (அதனால்
அவளும் அழிவாள்).