Al-Ikhlâs
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[112:1]
(நபியே!) நீர்
கூறுவீராக: அல்லாஹ்
அவன் ஒருவனே.
[112:2]
அல்லாஹ்
(எவரிடத்தும்) தேவையற்றவன்.
[112:3]
அவன்
(எவரையும்) பெறவுமில்லை (எவராலும்)
பெறப்படவுமில்லை.
[112:4]
அன்றியும், அவனுக்கு
நிகராக எவரும்
இல்லை.
Al-Falaq
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[113:1]
(நபியே!) நீர்
சொல்வீராக: அதிகாலையின்
இறைவனிடத்தில்
நான் காவல் தேடுகிறேன்.
[113:2]
அவன்
படைத்தவற்றின்
தீங்கை விட்டும்-
[113:3]
இருள்
பரவும் போது ஏற்படும் இரவின்
தீங்கை விட்டும்-
[113:4]
இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து)
ஊதும் பெண்களின்
தீங்கை விட்டும்,
[113:5]
பொறாமைக்காரன்
பொறாமை கொள்ளும் போதுண்டாகும்
தீங்கை விட்டும்
(காவல் தேடுகிறேன்).
An-Nâs
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[114:1]
(நபியே!) நீர்
கூறுவீராக: மனிதர்களின்
இறைவனிடத்தில்
நான் காவல் தேடுகிறேன்.
[114:2]
(அவனே)
மனிதர்களின் அரசன்;
[114:3]
(அவனே)
மனிதர்களின் நாயன்.
[114:4]
பதுங்கியிருந்து
வீண் சந்தேகங்களை
உண்டாக்குபவனின்
தீங்கை விட்டும்
(இறைவனிடத்தில்
நான் காவல் தேடுகிறேன்).
[114:5]
அவன்
மனிதர்களின் இதயங்களில் வீண்
சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
[114:6]
(இத்தகையோர்)
ஜின்களிலும், மனிதர்களிலும்
இருக்கின்றனர்.