[3:116]
நிச்சயமாக
எவர் நிராகரிக்கின்றார்களோ, அவர்களைவிட்டு
அவர்களுடைய செல்வமும், அவர்களுடைய சந்ததியும், அல்லாஹ்விடமிருந்து
எந்த ஒரு பொருளையும்
காப்பாற்ற முடியாது
- அவர்கள் நரக
நெருப்பிற்குரியவர்கள்; அவர்கள்
அதில் என்றென்றும்
இருப்பார்கள்.
[3:117]
இவ்வுலக
வாழ்வில் அவர்கள் செலவழிப்பது
ஒரு காற்றுக்கு
ஒப்பாகும்;. அது (மிகவும்)
குளிர்ந்து (பனிப்புயலாக மாறி)
தமக்குத் தாமே
தீங்கிழைத்துக்
கொண்ட அக்கூட்டத்தாரின்
(வயல்களிலுள்ள) விளைச்சலில்பட்டு
அதை அழித்துவிடுகிறது
- அவர்களுக்கு
அல்லாஹ் கொடுமை செய்யவில்லை.
அவர்கள் தமக்குத்
தாமே கொடுமையிழைத்துக்
கொள்கிறார்கள்.
[3:118]
நம்பிக்கை
கொண்டோரே! நீங்கள் உங்(கள்
மார்க்கத்தைச்
சார்ந்தோர்)களைத்
தவிர (வேறெவரையும்)
உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக
ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. ஏனெனில்
(பிறர்) உங்களுக்குத்
தீமை செய்வதில்
சிறிதும் குறைவு
செய்ய மாட்டார்கள்;. நீங்கள்
வருந்துவதை அவர்கள்
விரும்புவார்கள்;. அவர்கள்
உங்கள் மேல் கொண்டுள்ள
கடுமையான வெறுப்பு
அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது.
அவர்கள் நெஞ்சங்கள்
மறைத்து வைத்திருப்பதோ
இன்னும் அதிகமாகும்;. நிச்சயமாக
நாம் (இது பற்றிய)
ஆயத்களைத் தெளிவு
படுத்திவிட்டோம்;. நீங்கள்
உணர்வுடையோரானால்
(இதை அறிந்து கொள்வீர்கள்).
[3:119]
(முஃமின்களே!) அறிற்து கொள்ளுங்கள்;. நீங்கள்
அவர்களை நேசிப்போராய்
இருக்கின்றீர்கள்
- ஆனால் அவர்கள் உங்களை
நேசிக்கவில்லை.
நீங்கள் வேதத்தை
முழுமையாக நம்புகிறீர்கள்;. ஆனால் அவர்களோ
உங்களைச் சந்திக்கும்
போது "நாங்களும்
நம்புகிறோம்" என்று கூறுகிறார்கள்;. எனினும்
அவர்கள் (உங்களை
விட்டு விலகித்)
தனியாக இருக்கும் போது, அவர்கள்
உங்கள் மேலுள்ள
ஆத்திரத்தினால்
(தம்) விரல் நுனிகளைக் கடித்துக்கொள்கிறார்கள்.
(நபியே!) நீர் கூறும்; "நீங்கள்
உங்கள் ஆத்திரத்தில்
இறந்து விடுங்கள்;. நிச்சயமாக
அல்லாஹ் (உங்கள்)
உள்ளங்களில் உள்ளவற்றை
அறிந்தவன்".
[3:120]
ஏதாவது
ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு
வருத்தத்தை கொடுக்கிறது.
உங்களுக்கு ஏதாவது
தீமை ஏற்பட்டால், அதற்காக
அவர்கள் மகிழ்ச்சி
அடைகிறார்கள்.
நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால்
அவர்களுடைய சூழ்ச்சி
உங்களுக்கு எந்தத்
தீமையும் செய்யாது. நிச்சயமாக
அல்லாஹ் அவர்கள்
செய்வதை (எல்லாம்)
சூழ்ந்து அறிகிறவன்.
[3:121]
(நபியே!
நினைவு கூர்வீராக) நீர் விடியற்காலையில்
உம் குடும்பத்தாரை
விட்டுச் சென்று
முஃமின்களைப்
போருக்காக (உஹது களத்தில்
அவரவர்) இடத்தில்
நிறுத்தினீர்;. அல்லாஹ்
எல்லாவற்றையும் செவியுறுவோனாகவும்
நன்கறிபவனாகவும்
இருக்கின்றான்.