[3:122]
(அந்தப்
போரில்) உங்களில் இரண்டு
பிரிவினர் தைரியம்
இழந்து (ஓடி விடலாமா)
என்று எண்ணியபோது
- அல்லாஹ் அவ்விரு
பிரிவாருக்கும்
(உதவி செய்து) காப்போனாக
இருந்தான்;. ஆகவே முஃமின்கள் அல்லாஹ்விடத்திலேயே
முழு நம்பிக்கை
வைக்கவேண்டும்.
[3:123]
பத்று
போரில் நீங்கள்
மிகவும் சக்தி
குறைந்தவர்களாக
இருந்த போது, அல்லாஹ்
உங்களுக்கு உதவி
புரிந்தான்;. ஆகவே நீங்கள்
நன்றி செலுத்துவதற்காக
அல்லாஹ்வுக்கு
அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
[3:124]
(நபியே!) முஃமின்களிடம்
நீர் கூறினீர்; "உங்கள்
ரப்பு (வானிலிருந்து)
இறக்கப்பட்ட மூவாயிரம்
வானவர்களைக் கொண்டு
உங்களுக்கு உதவி
செய்வது உங்களுக்குப்
போதாதா?" என்று.
[3:125]
ஆம்!
நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து
பொறுமையுடனிருந்தால், பகைவர்கள்
உங்கள் மேல் வேகமாக
வந்து பாய்ந்த போதிலும், உங்கள்
இறைவன் போர்க்குறிகள்
கொண்ட ஐயாயிரம்
வானவர்களைக் கொண்டும் உங்களுக்கு
உதவி புரிவான்.
[3:126]
உங்கள்
இருதயங்கள் (அவ்வுதவியில்
நின்றும்) நிம்மதியடையவும், ஒரு நல்ல
செய்தியாகவுமே
தவிர (வேறெதற்குமாக)
அல்லாஹ் அதைச்
செய்யவில்லை. அல்லாஹ்
விடத்திலல்லாமல்
வேறு உதவியில்லை.
அவன் மிக்க வல்லமையுடையவன்; மிகுந்த
ஞானமுடையவன்.
[3:127]
(அல்லாஹ்வுடைய
உதவியின் நோக்கம்)
நிராகரிப்போரில்
ஒரு பகுதியினரை
அழிப்பதற்கு, அல்லது
அவர்கள் சிறுமைப்பட்டுத்
தோல்வியடைந்தோராய்த்
திரும்பிச் செல்வதற்காகவுமேயாகும்.
[3:128]
(நபியே!) உமக்கு
இவ்விஷயத்தில் ஒரு சம்பந்தமும்
இல்லை. அவன் அவர்களை
மன்னித்து விடலாம்;. அல்லது
அவர்களை வேதனைப்படுத்தலாம்
- நிச்சயமாக
அவர்கள் கொடியோராக
இருப்பதின் காரணமாக.
[3:129]
வானங்களிலும், பூமியிலும் உள்ளவையெல்லாம்
அல்லாஹ்வுக்கே
உரியவை. தான் நாடியவர்களை
அவன் மன்னிக்கின்றான்;. இன்னும்
தான் நாடியவர்களை
வேதனைப்படுத்தவும்
செய்கின்றான்
- அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், பெருங்கருணையாளன்.
[3:130]
ஈமான்
கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே
அதிகரித்த நிலையில்
வட்டி (வாங்கித்)
தின்னாதீர்கள்;. இன்னும்
நீங்கள் அல்லாஹ்வுக்கு
அஞ்சி (இதைத் தவிர்த்துக்
கொண்டால்) வெற்றியடைவீர்கள்.
[3:131]
தவிர
(நரக) நெருப்பிற்கு அஞ்சுங்கள், அது காஃபிர்களுக்காக
சித்தம் செய்து
வைக்கப்பட்டுள்ளது.
[3:132]
அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும்
கீழ்படியுங்கள்;. நீங்கள்
(அதனால் அல்லாஹ்வினால்)
கிருபை செய்யப்படுவீர்கள்.