[3:158]
நீங்கள்
மரணமடைந்தாலும்
அல்லது கொல்லப்பட்டாலும்
அல்லாஹ்விடமே
நீங்கள் ஒரு சேரக்
கொண்டு வரப்படுவீர்கள்.
[3:159]
அல்லாஹ்வுடைய
ரஹ்மத்தின் காரணமாகவே
நீர் அவர்களிடம்
மென்மையாக (கனிவாக)
நடந்து கொள்கிறீர்;. (சொல்லில்) நீர்
கடுகடுப்பானவராகவும், கடின
சித்தமுடையவராகவும்
இருந்திருப்பீரானால், அவர்கள்
உம் சமூகத்தை விட்டும்
ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே
அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக.
அவ்வாறே அவர்களுக்காக
மன்னிப்புத் தேடுவீராக.
தவிர, சகல காரியங்களிலும்
அவர்களுடன் கலந்தாலோசனை
செய்யும், பின்னர்
(அவை பற்றி) நீர் முடிவு
செய்து விட்டால்
அல்லாஹ்வின்; மீதே
பொறுப்பேற்படுத்துவீராக!
- நிச்சயமாக அல்லாஹ்
தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை
நேசிக்கின்றான்.
[3:160]
(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு
உதவி செய்வானானால், உங்களை
வெல்பவர் எவரும்
இல்லை. அவன் உங்களைக் கைவிட்டு
விட்டால், அதன் பிறகு
உங்களுக்கு உதவி
செய்வோர் யார்
இருக்கிறார்கள்? எனவே, முஃமின்கள்
அல்லாஹ்வின் மீதே
(முழுமையாக நம்பிக்கை
பூண்டு) பொறுப்பேற்படுத்திக்
கொள்ளட்டும்.
[3:161]
எந்த
நபிக்கும் மோசடி
செய்வது கூடாது.
எவரேனும் மோசம்
செய்வாராயின், அவர்
மோசம் செய்ததை
இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில்
ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய)
பலனை (க்குறைவின்றிக்)
கொடுக்கப்படும்.
இன்னும், அவர்கள்
எவ்வகையிலும்
அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
[3:162]
அல்லாஹ்வின்
விருப்பத்தைப் பின்
பற்றி நடப்போர், அல்லாஹ்வின்
கோபத்தைத் தம்மேல்
வரவழைத்துக் கொண்டவர்
போல் ஆவாரா? (அல்ல
- கோபத்தை வரவழைத்துக்
கொண்டோருடைய) அவனது
இருப்பிடம் நரகமேயாகும்;. அது தங்குமிடங்களில்
மிகவும் கெட்டதுமாகும்.
[3:163]
அல்லாஹ்விடத்தில் அவர்களுக்குப்
பல நிலைகள் உள்ளன
- இன்னும் அல்லாஹ்
அவர்கள் செய்பவை
அனைத்தையும் பார்ப்பவனாகவே
இருக்கின்றான்.
[3:164]
நிச்சயமாக
அல்லாஹ் முஃமின்களுக்கு
அருள் புரிந்திருக்கின்றான்;. அவன்
அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை)
அனுப்பி வைத்தான்;. அவர்
அவனுடைய வசனங்களை
அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்;. இன்னும்
அவர்களைப் (பாவத்தைவிட்டும்)
பரிசுத்தமாக்குகிறார்;. மேலும்
அவர்களுக்கு வேதத்தையும்
ஞானத்தையும் கற்றுக்
கொடுக்கின்றார்
- அவர்களோ நிச்சயமாக
இதற்கு முன் பகிரங்கமான
வழி கேட்டிலேயே
இருந்தனர்.
[3:165]
இன்னும்
உங்களுக்கு (உஹதில்) ஒரு துன்பம்
வந்துற்றபோது, நீங்கள்
(பத்ரில்) அவர்களுக்கு
இது போன்று இருமடங்குத்
துன்பம் உண்டு
பண்ணியிருந்த
போதிலும், "இது எப்படி வந்தது?" என்று
கூறுகிறீர்கள்.
(நபியே!) நீர்
கூறும்; இது (வந்தது) உங்களிடமிருந்தேதான்
- நிச்சயமாக அல்லாஹ்
எல்லாப் பொருட்கள்
மீதும் பேராற்றலுடையவனாக
இருக்கிறான்,"