[3:166]
மேலும், (நீங்களும் முஷ்ரிக்குகளும்
ஆகிய) இரு கூட்டத்தினரும்
சந்தித்த நாளையில்
உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள்
அல்லாஹ்வின் அனுமதி
கொண்டே தான் (ஏற்பட்டன.
இவ்வாறு ஏற்பட்டதும்) முஃமின்களை
(சோதித்து) அறிவதற்காகவேயாம்.
[3:167]
இன்னும்
(முனாஃபிக் தனம் செய்யும்)
நயவஞ்சகரை(ப் பிரித்து)
அறிவதற்கும் தான்; அவர்களிடம்
கூறப்பட்டது, "வாருங்கள்!
அல்லாஹ்வின் பாதையில்
போர் புரியுங்கள்
அல்லது (பகைவர்கள் அணுகாதவாறு)
தடுத்து விடுங்கள்," (அப்போது)
அவர்கள் சொன்னார்கள்; "நாங்கள்
போரைப் பற்றி அறிந்திருந்தால்
நிச்சயமாக நாங்கள்
உங்களைப் பின்பற்றியிருப்போம்." அன்றையதினம்
அவர்கள் ஈமானைவிட
குஃப்ரின் பக்கமே அதிகம்
நெருங்கியிருந்தார்கள்;. தம் உள்ளங்களில்
இல்லாதவற்றைத்
தம் வாய்களினால் கூறினர்;. அவர்கள்
(தம் உள்ளங்களில்)
மறைத்து வைப்பதையெல்லாம்
அல்லாஹ் நன்கு அறிகிறான்.
[3:168]
(போருக்கு
செல்லாமல் அம் முனாஃபிக்குகள்
தம் வீடுகளில்)
அமர்ந்து கொண்டே
(போரில் மடிந்த)
தம் சகோதரர்களைப்
பற்றி; "அவர்கள் எங்களைப்
பின்பற்றியிருந்தால் கொல்லப்பட்டிருக்க
மாட்டார்கள்" என்று
கூறுகிறார்கள்; (நபியே!)
நீர் கூறும்; "நீங்கள்
(சொல்வதில்) உண்மையாளர்களானால்
உங்களை மரனம் அணுகாவண்ணம் தடுத்து
விடுங்கள்" (பார்ப்போம்
என்று).
[3:169]
அல்லாஹ்வின்
பாதையில் போரிட்டுக்
கொல்லப்பட்டவர்களை
மரித்தவர்கள்
என்று நிச்சயமாக
எண்ணாதீர்கள்
- தம் ரப்பினிடத்தில்
அவர்கள் உயிருடனேயே
இருக்கிறார்கள்
- (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.
[3:170]
தன்
அருள் கொடையிலிருந்து அல்லாஹ்
அவர்களுக்கு அளித்ததைக்
கொண்டு அவர்கள்
ஆனந்தத்துடன்
இருக்கிறார்கள்;. மேலும் (போரில்
ஈடுபட்டிருந்த
தன் முஃமினான சகோதரர்களில்
மரணத்தில்) தம்முடன் சேராமல்
(இவ்வுலகில் உயிருடன்)
இருப்போரைப் பற்றி; "அவர்களுக்கு
எவ்வித பயமுமில்லை, அவர்கள்
துக்கப்படவும்
மாட்டார்கள்" என்று
கூறி மகிழ்வடைகிறார்கள்.
[3:171]
அல்லாஹ்விடமிருந்து
தாங்கள் பெற்ற
நிஃமத்துகள் (நற்பேறுகள்)
பற்றியும், மேன்மையைப்
பற்றியும் நிச்சயமாக அல்லாஹ்
முஃமின்களுக்குரிய
நற்கூலியை (ஒரு சிறிதும்)
வீணாக்கி விடுவதில்லை. என்பதைப்
பற்றியும் மகிழ்வடைந்தோராய்
இருக்கின்றார்கள்.
[3:172]
அவர்கள்
எத்ததையோரென்றால், தங்களுக்கு(ப்
போரில்) காயம்பட்ட
பின்னரும் அல்லாஹ்வுடையவும், (அவனுடைய) ரஸூலுடையவும்
அழைப்பை ஏற்(று
மீண்டும் போருக்குச்
சென்)றனர்; அத்தகையோரில் நின்றும்
யார் அழகானவற்றைச்
செய்து, இன்னும் பாவத்திலிருந்து
தங்களைக் காத்துக் கொள்கிறார்களோ
அவர்களுக்கு மகத்தான
நற்கூலியிருக்கிறது.
[3:173]
மக்களில்
சிலர் அவர்களிடம்; "திடமாக
மக்களில் (பலர்
உங்களுடன் போரிடுவதற்காகத்)
திரண்டு விட்டார்கள், எனவே
அப்படையைப்பற்றி
அஞ்சிக் கொள்ளுங்கள்" என்று
கூறி(அச்சுறுத்தி)னர்;. ஆனால்
(இது) அவர்களின்
ஈமானைப் பெருக்கி
வலுப்படச் செய்தது. "அல்லாஹ்வே
எங்களுக்குப் போதுமானவன். அவனே
எங்களுக்குச்
சிறந்த பாதுகாவலன்" என்று
அவர்கள் கூறினார்கள்.