[3:181]
நிச்சயமாக
அல்லாஹ் ஏழை, நாங்கள்
தாம் சீமான்கள்" என்று
கூறியவர்களின் சொல்லை
திடமாக அல்லாஹ்
கேட்டுக் கொண்டான்;. (இவ்வாறு)
அவர்கள் சொன்னதையும், அநியாயமாக
நபிமார்களை அவர்கள்
கொலை செய்ததையும்
நாம் பதிவு செய்து
கொள்வோம், "சுட்டுப்
பொசுக்கும் நரக
நெருப்பின் வேதனையைச்
சுவையுங்கள்" என்று (அவர்களிடம்
மறுமையில்) நாம்
கூறுவோம்.
[3:182]
இதற்கு
காரணம் முன்னமேயே உங்கள்
கைகள் செய்து அனுப்பிய
கெட்ட செயல்களேயாகும்;. நிச்சயமாக
அல்லாஹ் தன் அடியார்களுக்கு
எவ்வித அநீதியும்
செய்பவனல்லன்.
[3:183]
மேலும்
அவர்கள், "எந்த ரஸூலாக
இருந்தாலும், அவர்
கொடுக்கும் குர்பானியை(பலியை)
நெருப்பு சாப்பிடு(வதை நமக்கு
காண்பிக்கு)ம்
வரை அவர் மீது
நாங்கள் விசவாசம்
கொள்ள வேண்டாம்" என்று
அல்லாஹ் எங்களிடம்
உறுதிமொழி வாங்கியுள்ளான்" என்று
கூறுகிறார்கள். (நபியே!)
"எனக்கு முன்னர்
உங்களிடம் வந்த
தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும்
நீங்கள் கேட்டுக்கொண்ட
(படி பலியை நெருப்பு
உண்ப)தையும் திடமாகக்
காண்பித்தார்கள்.
அப்படியிருந்தும்
ஏன் அவர்களை நீங்கள்
கொன்றீர்கள்? நீங்கள்
உண்மையாளர்களாக
இருந்தால் இதற்கு
பதில் சொல்லுங்கள்" என்று
நீர் கூறும்.
[3:184]
எனவே.
உம்மை அவர்கள் பொய்ப்பித்தால்
(நீர் கவலையுற
வேண்டாம், ஏனெனில்)
உமக்கு முன்னர்
தெளிவான ஆதாரங்களையும், ஆகமங்களையும், பிரகாசமான
வேதத்தையும் கொண்டு
வந்த நபிமார்களும் (அக்கால
மக்களால்) பொய்ப்பிக்க
பட்டிருக்கின்றனர்.
[3:185]
ஒவ்வோர்
ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே
ஆகவேண்டும்; அன்றியும்
- இறுதித் தீர்ப்பு
நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய
பிரதி பலன்கள்
முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே
எவர் (நரக) நெருப்பிலிருந்து
பாதுகாக்கப்பட்டுச்
சுவர்க்கத்தில்
பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ.
அவர் நிச்சயமாக
வெற்றியடைந்து
விட்டார்;. இவ்வுலக
வாழ்க்கை மயக்கத்தை
அளிக்கவல்ல (அற்ப
இன்பப்) பொருளேயன்றி
வேறில்லை.
[3:186]
(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள்
ஆத்மாக்களிலும்
திடமாக நீங்கள்
சோதிக்கப்படுவீர்கள்;. உங்களுக்கு
முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும்
நிந்தனைகள் பலவற்றையும்
செவிமடுப்பீர்கள்;. ஆனால்
நீங்கள் பொறுமையை
மேற்கொண்டு, (இறைவனிடம்)
பயபக்தியோடு இருந்தீர்களானால்
நிச்சயமாக அதுவே எல்லாக்
காரியங்களிலும்
(நன்மையைத் தேடி தரும்)
தீர்மானத்துக்குரிய
செயலாகும்.