[3:187]
தவிர
வேதம் கொடுக்கப்பட்டோரிடம்
அவர்கள் அதை மக்களுக்குத்
தெளிவாக எடுத்துரைக்க
வேண்டும், அதை மறைக்கக்
கூடாது என்று அல்லாஹ்
உறுதி மொழி வாங்கியதை
(அம்மக்களுக்கு
நபியே! நீர்
நினைவுபடுத்துவீராக).
அப்பால், அவர்கள்
அதைத் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால்
எறிந்து விட்டு; அதற்குப்
(பதிலாகச்) சொற்ப
கிரயத்தைப் பெற்றுக் கொண்டார்கள்
- அவர்கள் (இவ்வாறு)
வாங்கிக் கொண்டது
மிகக் கெட்டதாகும்.
[3:188]
எவர்
தாம் செய்த (சொற்பமான)தைப்பற்றி
மகிழ்ச்சி கொண்டும்; தாம்
செய்யாததை (செய்ததாகக்
காட்டிக்) கொண்டு
புகழ்படவேண்டும்
என்று விருப்புகிறார்களோ, அவர்கள்
வேதனையிலிருந்து வெற்றியடைந்து
விட்டார்கள் என்று
(நபியே!) நீர் ஒரு
போதும் எண்ணாதீர்
- அவர்களுக்கு
நோவினை தரும் வேதனையுண்டு.
[3:189]
வானங்கள், பூமி
ஆகியவற்றின் ஆட்சி
அல்லாஹ்வுக்கே
உரியது. இன்னும்
அல்லாஹ் எல்லாப்
பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
[3:190]
நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின்
படைப்பிலும்; இரவும், பகலும்
மாறி மாறி வருவதிலும்
அறிவுடையோருக்கு திடமாக
அத்தாட்சிகள்
பல இருக்கின்றன.
[3:191]
அத்தகையோர்
நின்ற நிலையிலும், இருந்த
இருப்பிலும் தங்கள்
விலாப் புறங்களில்
(சாய்ந்து) இருக்கும்
போதும் அல்லாஹ்வை
(நினைவு கூர்ந்து)
துதிக்கிறார்கள்;. வானங்கள், பூமி
ஆகியவற்றின் படைப்பைப்
பற்றியும் சிந்தித்து, "எங்கள்
இறைவனே! இவற்றையெல்லாம்
நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா
தூய்மையானவன்; (நரக) நெருப்பின்
வேதனையிலிருந்து எங்களைக்
காத்தருள்வாயாக!" (என்றும்;).
[3:192]
எங்கள்
இறைவனே! நீ எவரை
நரக நெருப்பில்
புகுத்துகின்றாயோ
அவரை நிச்சயமாக
நீ இழிவாக்கிவிட்டாய்;. மேலும் அக்கிரமக்காரர்களுக்கு
உதவி செய்வோர்
எவருமிலர்! (என்றும்;).
[3:193]
எங்கள்
இறைவனே! உங்கள்
இறைவன் மீது
நம்பிக்கை கொள்ளுங்கள்
என்று ஈமானின்
பக்கம் அழைத்தவரின்
அழைப்பைச் செவிமடுத்து
நாங்கள் திடமாக
ஈமான் கொண்டோம்; எங்கள்
இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை
மன்னிப்பாயாக!
எங்கள் தீமைகளை
எங்களை விட்டும்
அகற்றி விடுவாயாக! இன்னும், எங்க(ளுடைய
ஆன்மாக்க)ளைச்
சான்றோர்களு(டைய
ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!" (என்றும்;).
[3:194]
எங்கள்
இறைவனே! இன்னும்
உன் தூதர்கள் மூலமாக
எங்களுக்கு நீ வாக்களித்தை
எங்களுக்குத்
தந்தருள்வாயாக!
கியாம நாளில் எங்களை
இழிவுபடுத்தாது இருப்பாயாக!
நிச்சயமாக நீ வாக்குறுதிகளில்
மாறுபவன் அல்ல
(என்றும் பிரார்த்தித்துக்
கொண்டிருப்பார்கள்).