[4:7]
பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ
விட்டுச் சென்ற
(சொத்)தில் ஆண்களுக்கு
பாகமுண்டு. அவ்வாறே
பெற்றோரோ, நெருங்கிய
உறவினரோ விட்டுச்
சென்ற (சொத்)தில்
பெண்களுக்கும்
பாகமுண்டு - (அதிலிருந்துள்ள
சொத்து) குறைவாக
இருந்தாலும் சரி, அதிகமாக
இருந்தாலும் சரியே (இது அல்லாஹ்வினால்)
விதிக்கப்பட்ட
பாகமாகும்.
[4:8]
பாகப்பிரிவினை
செய்யும் போது (பாகத்திற்கு
உரிமையில்லா) உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ
வந்து விடுவார்களானால் அவர்களுக்கும்
அ(ச்சொத்)திலிருந்து
வழங்குங்கள்;. மேலும்
அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக்
கொண்டே பேசுங்கள்.
[4:9]
தங்களுக்கு
பின்னால் பலஹீனமான சந்ததிகளை
விட்டுச் சென்றால்
(அவர்களுடைய நிலை
என்னவாகும் என்று)
அஞ்சுகிறார்களோ அவர்கள்
பயந்து (முன் ஜாக்கிரதை
நடவடிக்கைகளை
எடுத்துக்) கொள்ளட்டும்;. மேலும் அல்லாஹ்வை
அஞ்சி, இதமான வார்த்தைகளையே
அவர்கள் சொல்லட்டும்.
[4:10]
நிச்சயமாக, யார்
அநாதைகளின் சொத்துக்களை
அநியாயமாக விழுங்குகிறார்களோ
அவர்கள் தங்கள்
வயிறுகளில் விழுங்குவதெல்லாம்
நெருப்பைத்தான்
- இன்னும் அவர்கள்
(மறுமையில்) கொழுந்து விட்டெறியும்
(நரக) நெருப்பிலேயே
புகுவார்கள்.
[4:11]
உங்கள்
மக்களில் ஓர் ஆணுக்கு, இரண்டு
பெண்களுக்குக்
கிடைக்கும் பங்குபோன்றது
கிடைக்கும் என்று
அல்லாஹ் உங்களுக்கு
உபதேசிக்கின்றான்.
பெண்கள் மட்டும்
இருந்து அவர்கள்
இரண்டு அல்லது அதற்கு
மேற்பட்டிருந்தால்
அவர்களுக்கு இறந்து
போனவர்விட்டுச்
சென்றதில் மூன்றில் இரண்டு
பாகம் கிடைக்கும்.
ஆனால் ஒரே பெண்ணாக
இருந்தால் அவள்
பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு
குழந்தை இருக்குமானால்
இறந்தவர் விட்டுச்
சென்றதில் ஆறில்
ஒரு பாகம்
(அவரது) பெற்றோர்
ஒவ்வொருவருக்கும்
உண்டு. ஆனால் இறந்தவருக்கு
குழந்தை இல்லாதிருந்து
பெற்றோர் மாத்திரமே
வாரிசாக இருந்தால்
அவர் தாய்க்கு
மூன்றில் ஒரு பாகம்
(மீதி தந்தைக்கு
உரியதாகும்). இறந்தவருக்கு
சகோதரர்கள் இருந்தால்
அவர் தாய்க்கு
ஆறில் ஒரு பாகம்
தான் (மீதி தந்தைக்கு
சேரும்). இவ்வாறு
பிரித்துக் கொடுப்பது
அவர் செய்துள்ள
மரண சாஸனத்தையும், கடனையும்
நிரைவேற்றிய பின்னர்தான்;. உங்கள்
பெற்றோர்களும், குழந்தைகளும்
- இவர்களில் யார்
நன்மை பயப்பதில் உங்களுக்கு
நெருக்கமாக இருப்பவர்கள்
என்று நீங்கள்
அறிய மாட்டீர்கள்;. ஆகையினால் (இந்த
பாகப்பிரிவினை)
அல்லாஹ்விடமிருந்து
வந்த கட்டளையாகும்;. நிச்சயமாக
அல்லாஹ் (யாவற்றையும்)
நன்கறிந்தவனாகவும்
மிக்க ஞானமுடையவனாகவும்
இருக்கின்றான்.