[4:12]
இன்னும்
உங்கள் மனைவியர் விட்டுச்
சென்றதில் - அவர்களுக்குப்
பிள்ளை இல்லாதிருந்தால்
உங்களுக்குப்
பாதி பாகம்
உண்டு. அவர்களுக்குப்
பிள்ளை இருந்தால்
அவர்கள் விட்டுச் சென்றவற்றிலிருந்து.
உங்களுக்கு கால்
பாகம்தான் - (இதுவும்)
அவர்கள் செய்திருக்கிற
மரண சாஸனத்தையும், கடனையம்
நிறைவேற்றிய பின்னர்தான்
- தவிர உங்களுக்குப்
பிள்ளையில்லாதிருப்பின்
நீங்கள் விட்டுச்
சென்றதிலிருந்து அவர்களுக்குக்
கால் பாகம்தான்;. உங்களுக்குப்
பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு
நீங்கள் விட்டுச்
சென்றதில் எட்டில்
ஒரு பாகம்தான்; (இதுவும்) நீங்கள்
செய்திருக்கும்
மரண சாஸனத்தையும்
கடனையும் நிறைவேற்றிய
பின்னரேதான்;. தந்தை, பாட்டன்
போன்ற முன் வாரிசுகளோ
அல்லது பிள்ளை, பேரன்
போன்ற பின் வாரிசுகளோ இல்லாத
ஓர் ஆணோ அல்லது
ஒரு பெண்ணோ - இவர்களுக்கு
ஒரு சகோதரனோ அல்லது
சகோதரியோ இருந்தால்
- அவர்கள் ஒவ்வொருவருக்கும்
ஆறில் ஒரு பாகம்
உண்டு. ஆனால் இதற்கு அதிகமாக
இருந்தால் அவர்கள்
மூன்றில் ஒரு பாகத்தில்
சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும்
- (இதுவும்) அவர்களின்
மரண சாஸனமும் கடனும்
நிறைவேற்றிய பின்னர்தான்.
ஆனால் (மரண சாஸனத்தைக்
கொண்டு வாரிசுகள்)
எவருக்கும் நஷ்டம் ஏற்படக்
கூடாது. (இது) அல்லாஹ்வினால்
விதிக்கப்பட்டதாகும்;. இன்னும்
அல்லாஹ் (யாவற்றையும்)
நன்கறிந்தவனாகவும், மிக்க
பொறுமையுடையோனுமாகவும்
இருக்கின்றான்.
[4:13]
இவை
அல்லாஹ்வின் வரையறைகளாகும்;. எவர்
அல்லாஹ்வுக்கும், அவன்
தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ
அவர்களை சுவனபதிகளில்
பிரவேசிக்கச்
செய்வான்;. அதன்
கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள்
அங்கே என்றென்றும்
இருப்பார்கள்
- இது மகத்தான வெற்றியாகும்.
[4:14]
எவன்
அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும்
மாறு செய்கிறானோ, இன்னும்
அவன் விதித்துள்ள
வரம்புகளை மீறுகிறானோ அவனை
நரகில் புகுத்துவான்;. அவன்
அங்கு (என்றென்றும்)
தங்கி விடுவான்;. மேலும் அவனுக்கு
இழிவான வேதனையுண்டு.