[2:49]
உங்களை
கடுமையாக வேதனைப்படுத்தி
வந்த ஃபிர்அவ்னின்
கூட்டத்தாரிடமிருந்து
உங்களை நாம் விடுவித்ததையும்
(நினைவு கூறுங்கள்)
அவர்கள் உங்கள்
ஆண் மக்களை கொன்று, உங்கள் பெண்மக்களை
(மட்டும்) வாழவிட்டிருந்தார்கள்; அதில்
உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து
ஒரு சோதனை இருந்தது.
[2:50]
மேலும்
உங்களுக்காக நாம் கடலைப்பிளந்து, உங்களை
நாம் காப்பாற்றி, நீங்கள்
பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபிர்அவ்னின்
கூட்டத்தாரை அதில்
மூழ்கடித்தோம்(என்பதையும்
நினைவு கூறுங்கள்).
[2:51]
மேலும்
நாம் மூஸாவுக்கு(வேதம் அருள)
நாற்பது இரவுகளை
வாக்களித்தோம்; (அதற்காக
அவர் சென்ற) பின்னர் காளைக்கன்(று
ஒன்)றைக் (கடவுளாக)
எடுத்துக் கொண்டீர்கள்; (அதனால்)
நீங்கள் அக்கிரமக்காரர்களாகி
விட்டீர்கள்.
[2:52]
இதன்
பின்னரும், நீங்கள்
நன்றி செலுத்துவதற்காக
நாம் உங்களை மன்னித்தோம்.
[2:53]
இன்னும், நீங்கள்
நேர்வழி பெறும்பொருட்டு
நாம் மூஸாவுக்கு
வேதத்தையும் (நன்மை
தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய)
ஃபுர்க்கானையும்
அளித்தோம் (என்பதையும்
நினைவு கூறுங்கள்).
[2:54]
மூஸா
தம் சமூகத்தாரை
நோக்கி "என் சமூகத்தாரே!
நீங்கள் காளைக்
கன்றை(வணக்கத்திற்காக)
எடுத்துக் கொண்டதன் மூலம்
உங்களுக்கு நீங்களே
அக்கிரமம் செய்து
கொண்டீர்கள்; ஆகவே, உங்களைப் படைத்தவனிடம்
பாவமன்னிப்புக்
கோருங்கள்; உங்களை
நீங்களே மாய்த்துக்
கொள்ளுங்கள்; அதுவே
உங்களைப் படைத்தவனிடம், உங்களுக்கு
நற்பலன் அளிப்பதாகும்" எனக் கூறினார்.
(அவ்வாறே நீங்கள்
செய்ததனால்) அவன்
உங்களை மன்னித்தான்
(என்பதையும் நினைவு
கூறுங்கள்.) நிச்சயமாக, அவன்
தவ்பாவை ஏற்(று
மன்னிப்)பவனாகவும், பெருங் கருணையுடையோனாகவும்
இருக்கிறான்.
[2:55]
இன்னும்
(இதையும் நினைவு கூறுங்கள்;)நீங்கள், 'மூஸாவே!
நாங்கள் அல்லாஹ்வை
கண்கூடாக காணும்
வரை உம்மீது நம்பிக்கை
கொள்ள மாட்டோம்" என்று
கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே
உங்களை ஓர் இடி
முழக்கம் பற்றிக்கொண்டது.
[2:56]
நீங்கள்
நன்றியுடையோராய் இருக்கும்
பொருட்டு, நீங்கள்
இறந்தபின் உங்களை
உயிர்ப்பித்து
எழுப்பினோம்.
[2:57]
இன்னும், உங்கள்
மீது மேகம் நிழலிடச்
செய்தோம்; மேலும் "மன்னு, ஸல்வா" (என்னும்
மேன்மையான உணவுப் பொருள்களை)
உங்களுக்காக இறக்கி
வைத்து, "நாம் உங்களுக்கு
அருளியுள்ள பரிசுத்தமான
உணவுகளிலிருந்து
புசியுங்கள்" (என்றோம்;) எனினும்
அவர்கள் நமக்குத்
தீங்கு செய்துவிடவில்லை, மாறாக, தமக்குத்
தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.