[4:38]
இன்னும், எவர்கள்
மற்ற மனிதர்களுக்குக்
காட்டுவதற்காகத்
தங்கள் பொருட்களைச்
செலவு செய்வதுடன், அல்லாஹ்வையும்
இறுதி நாளையும்
நம்பாதிருக்கின்றனரோ
(அவர்களுக்கு
ஷைத்தான் கூட்டாளியாவான்).
எவனுக்கு ஷைத்தான்
கூட்டாளியாக இருக்கின்றானோ, அவன் கூட்டாளிகளிலெல்லாம்
மிகத் தீயவன்
(என்பதை அறியவேண்டாமா?)
[4:39]
இவர்கள்
அல்லாஹ்வையும், இறுதி நாளையும்
நம்பி இவர்களுக்கு
அல்லாஹ் வழங்கியவற்றிலிருந்து
செலவும் செய்வார்களானால்.
இவர்களுக்கு என்ன
கேடு ஏற்பட்டுவிடப்
போகிறது? அல்லாஹ்
இவர்களை நன்கறிபவனாகவே
இருக்கின்றான்.
[4:40]
நிச்சயமாக
அல்லாஹ் (எவருக்கும்)
ஓர் அணுவளவு கூட
அநியாயம் செய்ய
மாட்டான்; (ஓர் அணுவளவு)
நன்மை செய்யப்பட்டிருந்தாலும்
அதனை இரட்டித்து, அதற்கு
மகத்தான நற்கூலியை தன்னிடத்திலிருந்து
(அல்லாஹ்) வழங்குகின்றான்.
[4:41]
எனவே
(நபியே!) ஒவ்வொரு கூட்டத்தினரையும்
(அவர்களுடைய) சாட்சியுடன்
நாம் கொண்டுவரும்போது, நாம்
இவர்கள் மீது
சாட்சியாக உம்மையும்
கொண்டு வந்தால்
(உம்மை நிராகரிக்கும்
இவர்களின் நிலைமை)
எப்படி இருக்கும்?
[4:42]
அந்த
நாளில், (இவ்வாறு) (அல்லாஹ்வை)
நிராகரித்து, (அல்லாஹ்வின்)
தூதருக்கும் மாறு
செய்தவர்கள், பூமி தங்களை
விழுங்கி சமப்படுத்திடக்
கூடாதா என்று விரும்புவார்கள்;. ஆனால் அல்லாஹ்விடத்தில்
எந்த விஷயத்தையும்
அவர்கள் மறைக்கமுடியாது.
[4:43]
நம்பிக்கை
கொண்டவர்களே! நீங்கள்
ஓதுவது இன்னது
என்று நீங்கள்
அறிந்து கொள்ள
முடியாதவாறு நீங்கள் போதையில்
இருக்கும்போது
தொழுகைக்கு நெருங்காதீர்கள்;. அன்றியும்
குளிப்புக் கடமையாக
இருக்கும்போது
குளிக்கும் வரை
(பள்ளிக்குள் செல்லாதீர்கள்; பள்ளியை). பாதையாக
கடந்து சென்றால்
தவிர. நீங்கள்
நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத்
தீண்டியோ இருந்து
(சுத்தம் செய்து
கொள்ள) தண்ணீரை
பெறாவிடின் சுத்தமான
மண்ணைத் தொட்டு
உங்களுடைய முகங்களையும், உங்களுடைய
கைகளையும் தடவி "தயம்மும்" செய்து
கொள்ளுங்கள்; (இதன்பின்
தொழலாம்). நிச்சயமாக அல்லாஹ்
பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும்
இருக்கின்றான்.
[4:44]
(நபியே!) வேதத்திலிருந்து
ஒரு பாகம்
கொடுக்கப்பட்டோரை
நீர் கவனிக்கவில்லையா? அவர்கள்
வழிகேட்டை விலைக்கு வாங்கிக்
கொள்கின்றனர்
- நீங்கள் வழிகெட்டு
விடவேண்டும் என்றும்
அவர்கள் விரும்புகிறார்கள்.