[4:45]
மேலும், அல்லாஹ்
உங்கள் பகைவர்களை
நன்கு அறிவான்; .(உங்களுக்குப்)
பாதுகாவலனாக இருக்க
அல்லாஹ் போதுமானவன்;. (உங்களுக்கு)
உதவியாளனாக இருக்கவும்
அல்லாஹ் போதுமானவன்.
[4:46]
யூதர்களில்
சிலர் வேத வாக்குகளின்
(கருத்தை) அதற்குரிய
இடத்திலிருந்து
புரட்டுகின்றனர்;. (இன்னும் உம்மை
நோக்கி, 'நபியே! நீர்
சொன்னதை) நாம்
கேட்டோம், அதற்கு
மாறாகவே செய்வோம்;, இன்னும்
(நாம் கூறுவதை)
நீர் கேளும்; (நீர்
கூறுவது) செவியேறாது
போகட்டும்!' என்று
கூறி, 'ராயினா' என்று
தங்கள் நாவுகளைக்
கோணிக்கொண்டு
(பேசி) சன்மார்க்கத்தைப்
பழிக்கின்றனர்;. (ஆனால்
இதற்குப் பதிலாக)
அவர்கள் "நாம் செவியேற்றோம், இன்னும்
(உமக்கு) நாங்கள்
வழிப்பட்டோம்;" (இன்னும்
நாம் சொல்வதை)
கேளுங்கள்;, எங்களை
அன்போடு கவனியுங்கள், (உள்ளுர்னா)
என்று கூறியிருப்பார்களானால், அது அவர்களுக்கு
நன்மையாகவும், மிக்க
நேர்மையாகவும் இருந்திருக்கும்-ஆனால்
அவர்களுடைய குஃப்ரின்
(நிராகரிப்பின்)
காரணமாக, அல்லாஹ் அவர்களைச்
சபித்து விட்டான்;. ஆகையால், குறைவாகவே
தவிர அவர்கள் ஈமான்கொள்ள மாட்டார்கள்.
[4:47]
வேதம்
வழங்கப்பட்டவர்களே!
நாம் உங்கள்
முகங்களை மாற்றி, அவற்றைப்
பின்புறமாகத்
திருப்பிவிடுவதற்கு
முன்னே அல்லது
(சனிக்கிழமையில்
வரம்பு மீறிய) "அஸ்ஹாபுஸ்
ஸப்து" என்றோரை நாம் சபித்த
பிரகாரம் சபிக்கும்
முன்னே, உங்களிடமுள்ள
(வேதத்)தை உண்மையாக்கி
அருளப் பெற்ற
இ(வ்வேதத்)தை (குர்ஆனை)
நம்புங்கள்;. அல்லாஹ்வின்
கட்டளை, நிறைவேற்றப்பட்டே
தீரும்.
[4:48]
நிச்சயமாக
அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை
மன்னிக்கமாட்டான்;. இதைத்தவிர, (மற்ற)
எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்;. யார்
அல்லாஹ்வுக்கு
இணைவைக்கிறார்களோ
அவர்கள் நிச்சயமாக
மிகவும் பெரிய
பாவத்தையே கற்பனை
செய்கின்றார்கள்.
[4:49]
(நபியே!) தங்களைத்
தாங்களே பரிசுத்தமானவர்கள்
என்(று கூறிக்கொள்)பவர்களை
நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவதுபோல்)
அல்ல! அல்லாஹ்
தான் நாடியவர்களைப்
பரிசுத்தம் ஆக்குவான்.
(இது விஷயத்தில்)
எவரும் ஓர் அணுவளவும்
அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
[4:50]
(நபியே!) அவர்கள்
எவ்வாறு அல்லாஹ்வுக்கு
(இணையுண்டென்று)
பொய்க்கற்பனை
செய்கிறார்கள்
என்பதை கவனியும்;. இதுவே
(அவர்களுடைய) பகிரங்கமான
பாவத்துக்குப்
போதுமா(ன சான்றாக)
இருக்கின்றது.
[4:51]
(நபியே)
வேதத்தில் ஒரு
பாகம் கொடுக்கப்பட்டவர்களை
நீர் பார்க்கவில்லையா? இவர்கள்
சிலைகளையும், ஷைத்தானையும், நம்பி
காஃபிர்களைக்
குறித்து இவர்கள்
தாம் நம்பிக்கை
கொண்டவர்களை விட
நேரான பாதையில்
இருக்கிறார்கள்
என்றும் கூறுகின்றனர்.