[4:52]
இவர்களைத்தான்
அல்லாஹ் சபிக்கிறான்;. எவர்களை
அல்லாஹ் சபிக்கிறானோ
அவர்களுக்கு உதவி
செய்பவர் எவரையும் நீர்
காணமாட்டீர்.
[4:53]
இவர்களுக்கு
ஆட்சியில் ஒரு சிறு
பாகமாவது இருக்கிறதா? அப்படியிருந்தால், (மற்ற)
மனிதர்களுக்கு (அதிலிருந்து)
ஓர் எள்ளளவும்
கொடுக்க மாட்டார்கள்.
[4:54]
அல்லாஹ்
தன் அருளினால் மனிதர்களுக்கு
வழங்கியவற்றின்மீது
இவர்கள் பொறாமை
கொள்கின்றார்களா? இன்னும்
நாம் நிச்சயமாக
இப்றாஹீமின் சந்ததியினருக்கு
வேதத்தையும், ஞானத்தையும்
கொடுத்தோம்;. அத்துடன்
மாபெரும் அரசாங்கத்தையும்
அவர்களுக்குக்
கொடுத்தோம்.
[4:55]
(அவ்வாறிருந்தும்)
அவர்களில் சிலர்
நம்பிக்கை கொண்டார்கள்;. சிலர்
தங்கள் முகங்களை
அதைவிட்டும் திருப்பிக் கொண்டார்கள்;. (இவ்வாறு
முகந் திருப்பிக்
கொண்டோருக்கு)
கொழுந்து விட்டு
எரியும் நரகமே போதுமானது.
[4:56]
யார்
நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை
நாம் நிச்சயமாக
நரகத்தில் புகுத்தி
விடுவோம்;. அவர்கள்
தோல்கள் கருகிவிடும்
போதெல்லாம் அவையல்லா
(வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப்
(பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு
நாம் மாற்றிக்
கொண்டே இருப்போம்
- நிச்சயமாக அல்லாஹ்
மிகைத்தவனாகவும்
ஞானமுள்ளவனாகவும்
இருக்கின்றான்.
[4:57]
(அவர்களில்)
எவர்கள் ஈமான் கொண்டு, நன்மையான
காரியங்களைச்
செய்கின்றார்களோ
அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம், அவற்றின்
கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்;. அவற்றில்
அவர்கள் என்றென்றும்
இருப்பர்; அங்கு
அவர்களுக்குப்
பரிசுத்தமான துணைவியர்
உண்டு. அவர்களை
அடர்ந்த நிழலிலும்
நுழையச் செய்வோம்.
[4:58]
நம்பி
உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட
அமானிதங்களை அவற்றின்
சொந்தக்காரர்களிடம்
நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே
தீர்ப்பு கூறினால்
நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல்
வேண்டும் என்றும்
உங்களுக்கு நிச்சயமாக
அல்லாஹ் கட்டளையிடுகிறான்;. நிச்சயமாக
அல்லாஹ் உங்களுக்கு
(இதில்) மிகவும்
சிறந்த உபதேசம்
செய்கிறான்;. நிச்சயமாக
அல்லாஹ் (யாவற்றையும்)
செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
[4:59]
நம்பிக்கை
கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு
கீழ்படியுங்கள்; இன்னும்
(அல்லாஹ்வின்)
தூதருக்கும், உங்களில் (நேர்மையாக)
அதிகாரம் வகிப்பவர்களுக்கும்
கீழ்படியுங்கள்.
உங்களில் ஏதாவது
ஒரு விஷயத்தில்
பிணக்கு ஏற்படுமானால்
- மெய்யாகவே நீங்கள்
அல்லாஹ்வையும், இறுதி நாளையும்
நம்புபவர்களாக
இருப்பின் - அதை
அல்லாஹ்விடமும், (அவன்)
தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள்
- இதுதான் (உங்களுக்கு)
மிகவும் சிறப்பான, அழகான
முடிவாக இருக்கும்.