[4:75]
பலஹீனமான
ஆண்களையும் பெண்களையும், சிறு
குழந்தைகளையும்
பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின்
பாதையில் நீங்கள்
போர் செய்யாதிருக்கக்
காரணம் யாது? (அவர்களோ) "எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள்
இருக்கும் இவ்வூரைவிட்டு
எங்களை வெளிப்படுத்துவாயாக. எங்களுக்காக
உன்னிடமிருந்து
(தக்க) ஒரு பாதுகாவலனை
அளித்தருள்வாயாக.
இன்னும் எங்களுக்காக
உன்னிடமிருந்து
ஓர் உதவியாளனையும்
அளித்தருள்வாயாக" என்று பிரார்த்தனை
செய்கிறார்கள்.
[4:76]
நம்பிக்கை
கொண்டவர்கள் அல்லாஹ்வின்
பாதையில் போர்
செய்கிறார்கள்;. நிராகரிப்பவர்கள்
ஷைத்தானின் பாதையில்
போர் செய்கிறார்கள்;. ஆகவே
(முஃமின்களாகிய)
நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு
எதிராகப் போர்
புரியுங்கள் -
நிச்சயமாக ஷைத்தானின்
சூழ்ச்சி பலஹீனமானதேயாகும்.
[4:77]
உங்களுடைய
கைகளை(ப் போர் செய்வதினின்றும்)
தடுத்துக் கொண்டும், தொழுகையை
நிலைநிறுத்தியும், ஜக்காத்தை கொடுத்தும்
வருவீர்களாக! என்று
எவர்களுக்குக்
கூறப்பட்டதோ அவர்களை
(நபியே!) நீங்கள்
பார்க்கவில்லையா? பின்னர், போர்
செய்ய வேண்டும்
என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில்
ஒரு பிரிவினர்
அல்லாஹ்வுக்குப்
பயப்படுபவதைப் போல்
அல்லது அதைவிட
அதிகமாகவே மனிதர்களுக்குப்
பயப்பட்டு "எங்கள்
இறைவனே! எங்கள்
மீது ஏன் (இப்) போரை
விதியாக்கினாய்? சிறிது
காலம் எங்களுக்காக
இதைப் பிற்படுத்தியிருக்கக்
கூடாதா? என்று கூறலானார்கள்.
(நபியே!) நீர் கூறுவீராக, "இவ்வுலக
இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு
மிகவும் மேலானது.
நீங்கள் எள்ளளவேனும்
அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்."
[4:78]
நீங்கள்
எங்கிருந்தபோதிலும் உங்களை
மரணம் அடைந்தே
தீரும்;. நீங்கள் மிகவும்
உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில்
இருந்த போதிலும்
சரியே! (போருக்குச்
சென்ற முனாஃபிக்களுக்கு) ஏதேனும்
ஒரு நன்மை ஏற்பட்டால்
இது அல்லாஹ்விடமிருந்து
கிடைத்தது" என்று கூறுகிறார்கள்;. ஆனால், அவர்களுக்கு
ஏதாவது தீங்கு
ஏற்பட்டாலோ, "இது உம்மிடம்
இருந்துதான் ஏற்பட்டது" என்று
கூறுகிறார்கள், (நபியே!
அவர்களிடம்) கூறும்; "எல்லாம்
அல்லாஹ்விடமிருந்தே
வந்திருக்கின்றன.
இந்த மக்களுக்கு என்ன
நேர்ந்துவிட்டது? எந்த
ஒரு விஷயத்தையும்
அவர்களுக்கு விளங்கிக்
கொள்ள முடியவில்லையே!"
[4:79]
உனக்குக்
கிடைக்கும் எந்த நன்மையும்
அல்லாஹ்விடமிருந்தே
கிடைக்கிறது. இன்னும், உனக்கு
ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால்
அது உன்னால் தான்
வந்தது. (நபியே!) நாம்
உம்மை மனிதர்களுக்கு
(இவற்றை எடுத்துக்
கூறுவதற்காகத்)
தூதராகவே அனுப்பியுள்ளோம்
- (இதற்கு) அல்லாஹ்வே
போதுமான சாட்சியாக
இருக்கின்றான்.