[4:95]
ஈமான்
கொண்டவர்களில்
(நோய், பலஹீனம், முதுமை, பார்வையிழத்தல்
போன்ற) எந்தக்
காரணமுமின்றி
(வீட்டில்) உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய
சொத்துக்களையும், தங்களுடைய
உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக)அல்லாஹ்வின்
பாதையில் போர்
புரிபவர்களும்
சமமாகமாட்டர்கள் தங்களுடைய
பொருட்களையும்
தங்களுடைய உயிர்களையும்
(அர்ப்பணித்தவர்களாக)
அறப்போர் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட
அந்தஸ்தில் அல்லாஹ்
மேன்மையாக்கி வைத்துள்ளான்;. எனினும், ஒவ்வொருவருக்கும்
(அவர்களுடைய உறுதிப்பாட்டுக்குத் தக்கபடி)
நன்மையை அல்லாஹ்
வாக்களித்துள்ளான்;. ஆனால்
அறப்போர் செய்வோருக்கோ, (போருக்குச்
செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட
அல்லாஹ் மகத்தான
நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான்.
[4:96]
(இதுவன்றி)
தன்னிடமிருந்து (மேலான)
பதவிகளையும், மன்னிப்பையும், அருளையும்
(அவர்களுக்கு)
அருள்கின்றான்;. ஏனென்றால்
அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க
கருணையுடையவனாகவும்
இருக்கின்றான்.
[4:97]
(அல்லாஹ்வின்ஆணையை நிறைவேற்றாது)
எவர் தமக்குத்
தாமே அநியாயம்
செய்து கொண்டார்களோ
அவர்களின் உயிரை மலக்குகள்
கைப்பற்றும்போது "நீங்கள்
எந்த நிலையில்
இருந்தீர்கள்?" என்று
கேட்பார்கள்.
(அதற்கவர்கள்) "நாங்கள்
பூமியில் (கொடுமையை
எதிர்க்க முடியா)
பலஹீனர்களாக இருந்தோம்" என்று
கூறுவார்கள். அல்லாஹ்வின்
பூமி விசாலமானதாக
இல்லையா? அதில்
(ஹிஜ்ரத் செய்து)
நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?" என (மலக்குகள்)
கேட்பார்கள்;. எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம்
நரகம் தான்;. சென்றடையும்
இடங்களில் அது
மிகக் கெட்டதாகும்.
[4:98]
(ஆனால்)
ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும்
பலஹீனமானவர்களைத்
தவிர - ஏனெனில்
இவர்கள் எவ்வித உபாயமும்
தெரியாதவர்கள்; (வெளியேறிச்
செல்ல) வழியும்
அறியாதவர்கள்.
[4:99]
அத்தகையோரை
அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்;. ஏனெனில்
அல்லாஹ் மிகவும்
மன்னிப்பவனாகவும், பிழை
பொறுப்பவனாகவும் இருக்கின்றான்.
[4:100]
இன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு
அல்லாஹ்வின் பக்கமும்
அவன் தூதர் பக்கமும்
ஹிஜ்ரத் செல்லும் நிலையில்
எவருக்கும் மரணம்
ஏற்பட்டு விடுமானால்
அவருக்குரிய நற்கூலி
வழங்குவது நிச்சயமாக
அல்லாஹ்வின் மீது
கடமையாகி விடுகின்றது
- மேலும் அல்லாஹ்
மிக மன்னிப்போனாகவும், பேரன்பு
மிக்கோனாகவும்
இருக்கின்றான்.
[4:101]
நீங்கள்
பூமியில் பிரயாணம் செய்யும்போது, காஃபிர்கள்
உங்களுக்கு விஷமம்
செய்வார்கள் என்று
நீங்கள் அஞ்சினால், அப்பொழுது
நீங்கள் தொழுகையைச்
சுருக்கிக் கொள்வது
உங்கள் மீது குற்றம்
ஆகாது. நிச்சயமாக
காஃபிர்கள் உங்களுக்குப்
பகிரங்கமான பகைவர்களாக இருக்கின்றனர்.