[4:106]
(தவறுகளுக்காக)
நீர் அல்லாஹ்விடம்
மன்னிப்புக் கோரும், நிச்சமாக
அல்லாஹ் மன்னிப்பவனாகவும்
மிக்க கருணை
உடையவனாகவும்
இருக்கின்றான்.
[4:107]
ஏனென்றால்
கொடிய பாவியான
சதி செய்து
கொண்டிருப்பவரை
நிச்சயமாக அல்லாஹ்
நேசிப்பதில்லை.
[4:108]
இவர்கள்
(தங்கள் சதிகளை) மனிதர்களிடமிருந்து
மறைத்து விடுகின்றனர்;. ஆனால்
(அவற்றை) அல்லாஹ்விடமிருந்து மறைக்க
முடியாது. ஏனெனில்
அவன் பொருந்திக்
கொள்ளாத சொற்களில்
அவர்கள் இரவில் (சதி) ஆலோசனை
செய்யும் போது
அவன் அவர்களுடன்
இருக்கின்றான்.
மேலும் அவர்கள் செய்பவற்றையெல்லாம்
அல்லாஹ் சூழ்ந்து
அறிந்தவனாக இருக்கின்றான்.
[4:109]
(முஃமின்களே!) என்னே!
இத்தகைய மனிதர்களுக்காகவா
இவ்வுலகில் நீங்கள்
வாதாடுகிறீர்கள்
- நியாயத் தீர்ப்பு
நாளில் அவர்களுக்காக
அல்லாஹ்விடம்
யார் வாதாடுவார்கள்? அல்லது
(அந்நாளில்) அவர்களுக்காக பொறுப்பாளியாக
ஆகுபவன் யார்?
[4:110]
எவரேனும்
ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது
தமக்குத் தாமே
அநியாயம் செய்து
பின்னர் அவர் (மனப்பூர்வமாக)
அல்லாஹ்விடம்
மன்னிப்புக் கேட்பாரானால்
- அவர் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும்
மிக்க கருணை உடையவனாகவும்
காண்பார்.
[4:111]
எவன்
பாவத்தைச் சம்பாதிக்காறானோ
அவன் தனக்குக்
கேடாகவே அதை நிச்சயமாக
சம்பாதிக்கிறான்.
அல்லாஹ் (யாவற்றையும்)
அறிந்தவனாகவும்
ஞானமுடையவனாகவும்
இருக்கின்றான்.
[4:112]
மேலும், எவன்
ஒரு தவறையோ அல்லது
பாவத்தையோ சம்பாதித்துவிட்டு
அப்பால் அதனை ஒரு
நிரபராதி மீது
வீசி விடுகிறானோ
அவன் நிச்சயமாக
அவதூற்றையும், பகிரங்கமான
பாவத்தையும் சுமந்து கொள்கின்றான்.
[4:113]
(நபியே!) உம் மீது
அல்லாஹ்வின் அருளும், அவனுடைய
கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில்
ஒரு கூட்டத்தார்
உம்மை வழி தவறி
நடக்கும்படி செய்ய
முயன்றிருப்பார்கள்;. ஆனால்
அவர்கள் தங்களையே
அன்றி வழி தவறும்படி
செய்ய முடியாது.
இன்னும் அவர்களால்
உமக்கு எந்த விதமான
தீங்கும் செய்துவிட
முடியாது. மேலும்
அல்லாஹ் உம் மீது
வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்;. நீர் அறியாதிருந்தவற்றையும்
அவன் உமக்குக்
கற்றுக் கொடுத்தான். உம் மீது
அல்லாஹ்வின் அருட்கொடை
மகத்தானதாகவே
இருக்கின்றது.